விஜய் டிவி, சன் டிவிக்கு போட்டியாக ஜீ டிவியில் ஒரு சமையல் நிகழ்ச்சி.. தொகுத்து வழங்கும் பிரபல நடிகை..!

  • IndiaGlitz, [Friday,September 13 2024]

விஜய் டிவியில் ’குக் வித் கோமாளி’ என்ற சமையல் காமெடி நிகழ்ச்சி 4 சீசன்கள் முடிவடைந்து தற்போது 5வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த சீசனில் சில மாற்றங்கள் இருந்தாலும் பார்வையாளர்கள் மத்தியில் அதே வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில் ’டாப் குக்கு டூப் குக்கு’ என்ற சமையல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சியை வெங்கடேஷ் பட் தொகுத்து வழங்கி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த நிலையில் சன் டிவி, விஜய் டிவிக்கு போட்டியாக ஜீ டிவியில் ’சமையல் எக்ஸ்பிரஸ்’ என்ற புதிய நிகழ்ச்சி செப்டம்பர் 15ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. நடிகை சீதா மற்றும் கிருஷ்ணா வேகன்ஸி இணைந்து சமைக்கும் இந்த சமையல் நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த நிகழ்ச்சியை நடிகை ஆயிஷா தொகுத்து வழங்க இருக்கிறார். ’சத்யா’ உள்ளிட்ட சீரியல் நடித்த இவர் தற்போது ’உப்பு புளி காரம்’ என்ற வெப் சீரிஸில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் பங்கேற்ற நிலையில் தற்போது சமையல் நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக அறிமுகமாக இருக்கும் நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.