உங்க மனசுக்கு பிரதமரே நேரில் சந்திப்பார்.. ரஜினி வீட்டுக்கு சென்ற 'குக் வித் கோமாளி' ஸ்ருதிகா
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டுக்கு ’குக் வித் கோமாளி’ சீசன் 3 டைட்டில் வின்னர் ஸ்ருதிகா சென்ற நிலையில் அதுகுறித்து வீடியோவை தனது வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவர் ‘உங்கள் மனதிற்கு தலைவர் என்ன, பிரதமரே நேரில் வந்து பார்ப்பார் என்று பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகையும் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னருமான ஸ்ருதிகா தனது குடும்பத்துடன் ரஜினியின் வீட்டுக்கு சென்று உள்ளார். அங்கு அவரை பார்க்க அனுமதி கிடைக்கவில்லை என்றாலும் அவரது வீட்டின் முன் எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்
மேலும் இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் கண்டிப்பாக தலைவர் அவர்களை நாங்கள் வீட்டில் சந்திப்போம் என்றும் அவருடன் காபி குடிப்போம் என்றும் கூறியுள்ளார். குறைந்த பட்சம் அவர் வாக்கிங் செல்லும்போதாவது நாங்கள் அவரை சந்திப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இந்த பதிவில் கூறியிருப்பதாவது:
இந்த வீடியோவில் இருப்பதை போலவே மில்லியன் கணக்கான மக்கள் எங்களைப் போன்ற அதே உணர்வைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்!! நாங்கள் தலைவர் வெறியன்கள், அந்த பாதையில் அவர் கடந்து செல்லும்போது ஏற்படும் அதிர்வு மிகவும் நேர்மறையாகவும் காந்தமாகவும் இருக்கும். அவருடைய வீட்டைக் கடந்து செல்லும்போது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
எங்களுக்கு சூப்பர்ஸ்டார் மீது நிறைய அன்பு இருக்கிறது, உலகில் மிகவும் எளிமையான மனிதர் அவர் தான். நாங்கள் அவரை வணங்குகிறோம், நாங்கள் அவரை நேசிக்கிறோம். அவருடைய எளிமையிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. தலைவா வாழ்க!’ என்று ஸ்ருதிகா பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வரும் நிலையில் நெட்டிசன் ஒருவர் ’உங்கள் மனதிற்கு பிரதமரே நேரில் வந்து சந்திப்பார், வெயிட் அண்ட் வாட்ச்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த கமெண்ட் மற்றும் ஸ்ருதிகாவின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout