'குக் வித் கோமாளி' சீசன் 2: இந்த வாரம் புகழ், ஷிவாங்கிக்கு கொண்டாட்டம் தான்!
Send us your feedback to audioarticles@vaarta.com
'குக் வித் கோமாளி நிகழ்ச்சி விஜய் டிவியில் மிகப்பெரிய வரவேற்புடன் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட மிக அதிகமான மக்கள் இந்த நிகழ்ச்சியை ரசித்து பார்த்து சிரித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த வாரம் 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி செலிப்ரேஷன் வாரம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 'குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நான்கு போட்டியாளர்களான உமா ரியாஸ், வனிதா, ரம்யா பாண்டியன் மற்றும் ரேகா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். சீசன் 1 மற்றும் சீசன் 2 போட்டியாளர்கள் இடையே இந்த வாரம் சமையல் போட்டி நடைபெற உள்ளதாக தெரிகிறது.
மேலும் இந்த வாரம் கோமாளிகளை தேர்வு செய்வதிலும் ஒரு புதுமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் 'குக்’கள் தான் கோமாளிகளை தேர்வு செய்து வரும் நிலையில் இந்த வாரம் கோமாளிகள் தங்களுக்கு பிடித்தவர்களை 'குக்’களை தேர்வு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் புகழ் மற்றும் ஷிவாங்கி ஆகிய இருவருக்கும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியிருக்கும்.
முதல் சீசனில் ரம்யா பாண்டியனை சீசன் முழுவதும் ஜொள்ளுவிட்ட புகழ், இந்த வாரம் அவரை தேர்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஷிவாங்கியின் தேர்வு அஸ்வின் ஆகத்தான் இருக்கும் என்பதை சொல்லவே தேவையில்லை. இதனை அடுத்து இந்த வாரம் நிகழ்ச்சி மிகவும் சுவராசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments