'குக் வித் கோமாளி' ஷிவாங்கி பெற்றோர்களை கெளரவித்த தமிழக அரசு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானாலும் தற்போது ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சியை பெற்றுள்ளவர் ஷிவாங்கி என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியில் அவர் அஸ்வினிடம் காதல் ரசத்துடன் அணுகுவதும் தனது குக்’களிடம் கோமாளித்தனத்தை காட்டி ரசிக்க வைத்தாலும் அவர்களுக்கு உதவியாக இருந்து டாஸ்க்கை ஜெயித்து கொடுப்பதிலும் ஷிவாங்கி நம்பர் 1 ஆக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியை ஷிவாங்கி காமெடிக்காகவே பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
இந்த நிலையில் சமீபத்தில் தமிழக அரசு ஷிவாங்கி பெற்றோர்களை கௌரவித்துள்ளது. சமீபத்தில் தமிழக அரசு 200க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்துள்ளது என்பது தெரிந்ததே. சிவகார்த்திகேயன் யோகி பாபு ராமராஜன் உள்பட பலருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்ட நிலையில் கலைமாமணி விருது பெற்ற பட்டியலில் உள்ளவர்கள் ஷிவாங்கி பெற்றோர்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது
நேற்று நடைபெற்ற விழாவில் ஷிவாங்கியின் பெற்றோர்களும் கர்நாடக இசை பாடகர்களுமான கிருஷ்ணகுமார் மற்றும் பின்னி கிருஷ்ணகுமார் ஆகியோர்களுக்கும் கலைமாமணி விருதை தமிழக முதல்வர் வழங்கி கெளரவித்தார். இதுகுறித்த புகைப்படங்கள் ஷிவாங்கியின் பெற்றோர்களின் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments