'சந்திரமுகி 2' படத்தில் 'குக் வித் கோமாளி' சீசன் 4 நடிகை.. வைரல் புகைப்படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சந்திரமுகி’ திரைப்படம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் 17 ஆண்டுகளுக்கு கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்ததோடு புதிய ஸ்டில் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் ஸ்ருஷ்டி இருப்பதை அடுத்து அவரும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வந்த ’சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. வடிவேலு உட்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் ‘சந்திரமுகி 2’ படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் பி வாசு உட்பட குழுவினர் அனைவரும் இணைந்து எடுத்த குருப் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றன. ‘சந்திரமுகி’ முதல் பாகம் போலவே இரண்டாவது பாகமும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
And... Cut! Chandramukhi 2 shooting has officially packed up. 🎬 We can't contain our excitement for fans to experience it on the big screen. 🤩🕴🏻🔥 #Chandramukhi2 🗝️ #CM2 🗝️
— Lyca Productions (@LycaProductions) June 20, 2023
🎬 #PVasu
🌟 @offl_Lawrence @KanganaTeam
🎶 @mmkeeravaani
🎥 @RDRajasekar
🛠️ #ThottaTharani
✂️🎞️… pic.twitter.com/cqxHM8ZJ86
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com