புதிய கார் வாங்கிய 'குக் வித் கோமாளி' புகழ்: குவியும் வாழ்த்துக்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பது தெரிந்ததே. ‘குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது பலமடங்கு மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது ‘குக் வித் கோமாளி’ சீசன் 2 என்பதும் குறிப்பாக கோமாளிகளான புகழ் மற்றும் ஷிவாங்கி ஆகியவர்களின் காமெடிகள் நான்ஸ்டாப்பாக இருப்பதால் ரசிக்கத்தக்க வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கிடைத்த புகழின் அடிப்படையில் புகழ் தற்போது ஒருசில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதும் அவ்வப்போது அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் புகழ் தற்போது புதிய கார் ஒன்றை வாங்கி உள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் கூடிய ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். ஹூண்டாய் ஷோரூமில் ஹூண்டாய் எக்ஸ்பீரியன்ஸ் என்ற காரின் சாவியை வாங்கும் புகைப்படத்தை புகழ் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அருகில் விஜய் டிவி தொகுப்பாளர் மாகாப உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மிகவும் ஏழ்மை நிலையில் இருந்து சென்னைக்கு வந்த புகழ் படிப்படியாக தனது திறமையை வெளிப்படுத்தி தற்போது கார் வாங்கும் அளவிற்கு முன்னேறி உள்ளதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.