close
Choose your channels

'குக் வித் கோமாளி' நடுவர் செஃப் தாமுவின் மகளா இவர்? வைரல் புகைப்படம்!

Wednesday, March 31, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி யாரும் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி விட்டது என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ’குக்’களும் சரி, கோமாளிகளும் சரி நான்ஸ்டாப் காமெடி செய்து வருவதே இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில நேரம் யார் குக், யார் கோமாளி என்றே தெரியாமல் இரு தரப்பினரும் காமெடியில் கலக்கி வருகின்றனர்

இந்த நிலையில் தற்போது ’குக் வித் கோமாளி நிகழ்ச்சி இறுதி கட்டத்தை அடைந்து வருவது ரசிகர்களுக்கு பெரும் சோகம் ஆகி உள்ளது. வரும் வாரம் இறுதி போட்டி நடைபெற உள்ளது என்பதும், இந்த இறுதிப் போட்டியில் கனி, அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகிலா மற்றும் பவித்ரா ஆகிய 5 பேர் தேர்வு பெற்றுள்ளனர் என்பதும் இவர்களில் ஒருவர் டைட்டில் பட்டம் வெல்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பெரும்பாலானோர்களின் கணிப்பின்படி அஸ்வின் அல்லது கனி ஆகிய இருவரில் ஒருவர் டைட்டில் பட்டம் வெல்வார்கள் என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் ’குக்’கள் மற்றும் கோமாளிகளுக்கு இணையாக காமெடி செய்து வருபவர்கள் நடுவர்கள் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு என்ற தாமோதரன் என்பது தெரிந்ததே. இருவரும் அவ்வப்போது கொடுக்கும் கவுண்டர்கள் ரசிக்கும் வகையில் இருக்கும் என்பதும் குறிப்பாக தாமுவின் காமெடிக்கு விழுந்து விழுந்து சிரிக்கலாம்.

இந்த நிலையில் தற்போது தாமு அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகள் அக்‌ஷயாவின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். தாமு மகள் அக்‌ஷயாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தாமுவுக்கு இவ்ளோ அழகான மகளா? என்று அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

சமீபத்தில் தாமுவின் மகள் அக்‌ஷயா, அஸ்வினுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து ஒரு நல்ல மனிதரை சந்தித்த சந்தோஷம் என்று குறிப்பிட்டிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment