close
Choose your channels

ரிலீசுக்கு தயாராகிறது 'குக் வித் கோமாளி' தர்ஷாவின் திரைப்படம்!

Thursday, May 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குக்’களும் சரி கோமாளிகளும் சரி மிகப்பெரிய அளவில் பிரபலமானது மட்டுமன்றி அதில் உள்ள பலருக்கும் திரையுலக வாய்ப்புகளும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அஸ்வின், புகழ், ஷிவாங்கி, பவித்ரா உள்ளிட்டவர்கள் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான தர்ஷா குப்தாவும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

‘திரெளபதி’ திரைப்படத்தை இயக்கிய மோகன் இயக்கும் அடுத்த திரைப்படமான ’ருத்ரதாண்டவம்’ என்ற திரைப்படத்தின் கதாநாயகியாக தர்ஷா குப்தா நடித்து வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இயக்குனர் மோகன் தனது சமூக வலைத்தளத்தில் ’ருத்ரதாண்டவம்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி விட்டதாகவும் தனது பகுதியின் டப்பிங் பணியை தர்ஷா குப்தா முடித்து விட்டதாகவும் பதிவுசெய்துள்ளார். மேலும் அவர் தர்ஷாவுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்றையும் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

‘திரெளபதி’ நாயகன் ரிச்சர்ட் இந்த படத்தில் முதன்முதலாக போலீஸ் கேரக்டரில் நடிக்கிறார் என்பதும் ‘திரெளபதி’ போலவே இந்த படமும் ஒரு உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது என்பதும் இந்த படத்திற்கு ‘திரெளபதி’ படத்திற்கு இசையமைத்த ஜூபின் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment