close
Choose your channels

பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் இணைந்த 'குக் வித் கோமாளி' புகழ்!

Tuesday, February 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ரசிகர்களின் மாபெரும் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வருவது நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் குக்குகளை கோமாளிகள் அட்டகாசம் நகைச்சுவை அம்சத்துடன் இருப்பதால் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு களித்து வருகின்றனர். மேலும் மற்ற நாட்களிலும் இந்த நிகழ்ச்சியை ஹாட்ஸ்டாரில் திரும்ப திரும்ப அதிக ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்துக் கொண்டிருக்கும் புகழ் சேட்டையும் நகைச்சுவையும் ரசிக்கும்படியாக உள்ளது. தர்ஷா மற்றும் பவித்ரா ஆகிய இருவரிடமும் மாறி மாறி ரொமான்ஸ் செய்வதும், ஷிவாங்கியுடன் பாசமலர் ஆக நடந்து கொள்வதும் நடுவர்களையும் விட்டு வைக்காமல் அவர்களுடனும் சேட்டைகளில் ஈடுபடுவது ஆகியவை ரசிக்கும்படியாக இருக்கும். குறிப்பாக ஷகிலாவுக்கு அவர் கோமாளியாக வந்து விட்டால் அவருடைய பாடு திண்டாட்டமாக இருக்கும் என்பதும் ஆனால் அதே நேரத்தில் பார்வையாளர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் புகழ், தற்போது பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்க இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அருண் விஜய் நடிப்பில் பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாக இருக்கும் ’அருண்விஜய் 33’ திரைப்படத்தில் ஏற்கனவே பிரகாஷ்ராஜ், ப்ரியா பவானிசங்கர், ராதிகா, ஜெயபாலன் உள்ளிட்ட பலர் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது புகழ் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment