மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை: ஜோடியாக கலந்து கொள்ளும் 'குக் வித் கோமாளி' பிரபலங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
குக் வித் கோமாளி நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக விஜய் டிவியில் ’மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை’ நிகழ்ச்சி தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரண்டு பிரபலங்கள் தங்களுடைய ஜோடியுடன் கலந்துகொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
’மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை’ நிகழ்ச்சி விஜய் டிவியில் பிரபலம் ஆனது என்பதும் இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசன் வரும் 24ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோ விடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது
இந்த சீசனில் குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தீபா தனது கணவருடன் கலந்து கொள்ள உள்ளார். அதேபோல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சரத் தனது மனைவியுடன் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேல்முருகன் தனது மனைவியுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார். மொத்தம் இந்த நிகழ்ச்சியில் 12 போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருப்பதாக புரமோவில் அறிவிக்கப்பட்டுள்ளது
Ready-யா இருங்க மக்களே! ??
— Vijay Television (@vijaytelevision) April 20, 2021
Mr & Mrs சின்னத்திரை சீசன் 3 - ஏப்ரல் 24 முதல் சனி மற்றும் ஞாயிறு மாலை 6.30 மணிக்கு நம்ம விஜய் டிவியில்.. #MrMrsChinnathirai #VijayTelevision pic.twitter.com/sZCm34clq7
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com