ஒரு மில்லியன் ஃபாலோயர்கள்: ரசிகர்களை நேரில் சந்தித்து நன்றி கூறிய 'குக் வித் கோமாளி' நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் குக்’கள் மற்றும் என்று கோமாளிகளின் சேட்டைகள், நகைச்சுவைகள் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கி உள்ளது என்பதால் சனி ஞாயிறு எப்போது வரும் என்று காத்திருக்கும் ரசிகர்கள் ஏராளம், அதுமட்டுமின்றி ஹாட்ஸ்டாரில் இந்த நிகழ்ச்சிகளை திரும்பத் திரும்ப பார்த்து வரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைவரும் இப்போது தமிழகம் முழுவதும் பிரபலம் ஆகி விட்டார்கள் என்பதும் அவர்களில் புகழ், ஷிவானி, அஸ்வின் உள்பட சிலருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சமீபத்தில் எலிமினேட் செய்யப்பட்ட தர்ஷா குப்தா, தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு மில்லியன் ஃபாலோயர்கள் கிடைத்துள்ளதை அடுத்து அவர் தனது ரசிகர்களை நேரில் சந்தித்து நன்றி செலுத்தும் நிகழ்வு ஒன்றை சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தார்.
சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் மதுரை, திருச்சி, கோவை, சென்னை உள்பட பல நகரங்களில் இருந்து ரசிகர்கள் வரவழைக்கப்பட்டனர். 300க்கும் மேற்பட்ட ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு நன்றி கூறி ரசிகர்களுடன் விருந்தும் சாப்பிட்டார். மேலும் ரசிகர்கள் கொடுத்த பரிசுகளை அன்புடன் பெற்றுக் கொண்ட தர்ஷா குப்தா, அவர்கள் கேட்ட பல கேள்விகளுக்கும் சாதுர்யமாக பதில் அளித்தார். இறுதியில் தனக்கு ஒரு மில்லியன் ஃபாலோயர்கள் கிடைக்க ரசிகர்கள் மட்டுமே காரணம் என்றும், எனது குடும்பமே ரசிகர்கள் தான் என்றும் இந்த நிகழ்வை ரசிகர்களுடன் கொண்டாட விரும்பியதால் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாகவும் அவர் கூறினார்.
தற்போது இயக்குனர் மோகன் ஜி இயக்கி வரும் ’ருத்ரதாண்டவம்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து வரும் தர்ஷாகுப்தா, மேலும் ஒரு பெரிய நிறுவனத்தின் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments