படு ஸ்லிம்மாக இருக்கும் குக் வித் கோமாளி தீபா......! வைரலாகும் புகைப்படம்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
திரைப்படங்களில் தன்னுடைய தேர்ந்த நடிப்பாலும், குணசித்திர நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை தீபா. மாயாண்டி குடும்பத்தார் மற்றும் கடைக்குட்டி சிங்கம் திரைப்படங்களில் இவர் நடித்த அக்கா கேரக்டர், திரையுலக வட்டாரங்களில் பெரிதளவில் பேசப்பட்டது. தன்னுடைய இயல்பான குணத்தாலும், வெகுளித்தனமான சிரிப்பாலும் அனைவரையும் கவர்ந்துவிடுவார். இவர் மிகவும் பிரபலமானது விஜய் டிவியில் வெளியான "குக் வித் கோமாளி" நிகழ்ச்சி மூலமாகத்தான். குக்காக இருப்பினும், தன் அழகான பேச்சால் ரசிகர்களை தன் வசப்படுத்தினார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் "டான்" படத்தில் நடித்து வருகிறார். தன் கணவர் ஷங்கருடன் இணைந்து "மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை" நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு, தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் தீபாவின் பழைய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் தீபா அக்கா படு சிலிம்மாக உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நம்ம அக்காவா என ஆச்சரியத்தில் உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments