'குக் வித் கோமாளி' அஸ்வினுக்கு இன்ப அதிர்ச்சி: ஷிவாங்கி வெளியிட்ட வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும் தெரிந்தது
ஒரு மணி நேர நிகழ்ச்சி என்றால் ஒரு மணி நேரமும் முழுக்க முழுக்க நகைச்சுவை அம்சம் கொண்ட இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது
குறிப்பாக அஸ்வின் மற்றும் ஷிவாங்கி செய்யும் ரொமான்ஸ் சேட்டைக்கு அளவே இல்லை என்பதும் அதேபோல் புகழ் மற்றும் ஷிவாங்கியின் அண்ணன் தங்கை சென்டிமென்ட், மதுரை முத்துவின் காமெடி, பவித்ரா மற்றும் புகழ் ரொமான்ஸ், பாபா மாஸ்டரின் அலப்பறைகள், ஷகிலா கறார், மணிமேகலையின் காமெடி என நிகழ்ச்சி முழுவதும் காமெடி அதிக அளவில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் ஹீரோ என்று கூறப்படும் அஸ்வினுக்கு பிறந்தநாளை அடுத்து அவருக்கு சக போட்டியாளர்கள் இன்ப அதிர்ச்சி அளித்தனர். அவரை ஒரு அறைக்கு அழைத்து வந்து திடீரென அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்த நாள் கேக்கை வெட்ட சொன்னதை அடுத்து அவர் இன்ப அதிர்ச்சி அடைந்தார்
சக போட்டியாளர்கள் மத்தியில் கேக் வெட்டியபின் அவர் பேசியபோது, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி தான் எனக்கு தனக்கு பெயரையும் புகழைப் பெற்றுத் தந்ததாகவும் இந்நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக சென்று கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்
இதுகுறித்து வீடியோக்களை ஷிவாங்கி தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com