கிளாமரில் கலக்கும் 'குக் வித் கோமாளி' நடிகை: இது கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் போட்டோஷூட்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான தர்ஷா குப்தா, சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை அவரது இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் ரசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கிளாமர் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

ஒரு பக்கம் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து வரும் தர்ஷா குப்தா, இன்னொரு பக்கம் தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதன் காரணமாகத்தான் இவருக்கு ஒரு சில சினிமா பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கிறிஸ்மஸ் தினத்தில் சிகப்பு காஸ்டியூமில் கவர்ச்சியான உடை அணிந்து போட்டோ ஷூட் ஒன்றை எடுத்துள்ள தர்ஷா, இந்த கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் லட்சக்கணக்கில் லைக்ஸ்களியும் ஆயிரக்கணக்கில் கமெண்ட்ஸ் களையும் பெற்றுள்ளது.

சன்னி லியோன் முக்கிய நாயகியாக நடித்துள்ள ’ஓ மை கோஸ்ட்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் தர்ஷா குப்தா நடித்துள்ளார் என்பதும் இந்த படம் வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ’திரவுபதி’ படத்தை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் உருவான ’ருத்ர தாண்டவம்’ என்ற படத்தில் நாயகியாக தர்ஷா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.