மகளுக்காகச் சிறையில் இருந்தபோது சம்பாதித்த பணத்தை வைத்து ஸ்மார்ட்போன் வாங்கிய தந்தை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் தற்போது ஆன்லைன் வகுப்புகளை தொடங்கிவிட்டன. இதில் ஏழை, எளிய மாணவர்களின் நிலைமைக் குறித்து பல தரப்புகளில் இருந்து கேள்வி எழுப்பப்பட்டாலும் விடை காணமுடியாத துயராமாகவே நீடிக்கிறது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூர் மாவட்டத்தில் உள்ள ஆம்தாரா என்ற கிராமத்தில் ஆனந்த் நாகேஷியா என்பவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு வீடு திரும்பியிருக்கிறார். வீட்டிற்கு சென்று பார்த்தவருக்கு கடும் அதிர்ச்சி. ஸ்மார்ட்போன் இல்லாததால் பள்ளிப் பாடங்களை கவனிக்காமல் மகள் வருத்தத்தில் இருந்திருக்கிறார். உடனே சிறையில் இருந்தபோது சம்பாதித்த பணத்தை வைத்து ஸ்மார்ட்போனை வாங்கி தனது மகளுக்கு பரிசளித்து இருக்கிறார் பாசக்கார தந்தை.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த ஆனந்த் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை சிறையில் இருந்தபோது உணர்ந்து கொண்டேன். என் மகள் படித்து மருத்துவராக ஆக வேண்டும் என விரும்புகிறாள். அவளது கனவுக்கு நான் உதவ வேண்டும் என நினைக்கிறேன் எனக் கூறியிருக்கிறார். குடும்பத் தகராறு ஒன்றில் மாமா ஒருவரை கொலை செய்துவிட்டு சிறைக்குச் சென்ற இவருக்கு 15 ஆண்டு மற்றும் 5 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.
நன்னடத்தைக் காரணமாகத் தண்டனை காலம் முடியும் முன்னே ஆனந்த் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார். தற்போது இவருக்கு 40 வயதாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது மகள் ஒரு ஸ்மார்ட்போன் இல்லாததால் பள்ளிப் பாடத்தை கவனிக்க முடியாமல் இருந்ததைக் குறித்து வருத்தப்பட்டிருக்கிறார் ஆனந்த். இதனால் உடனே சிறையில் சம்பாதித்த பணத்தை வைத்து ஸ்மார்ட் போனை வாங்கிக் கொடுத்து இருக்கிறார். தற்போது 12 ஆம் வகுப்பு படிக்கும் அவரது மகள் நெகிழ்ந்துபோய் தந்தைக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com