குட்டை ஆடை அணிந்தவர்களை கற்பழியுங்கள்: பெண்ணின் சர்ச்சை பேச்சால் பரபரப்பு

  • IndiaGlitz, [Thursday,May 02 2019]

குட்டை ஆடை அணிந்து வரும் பெண்கள் கற்பழிக்க தகுதியானவர்கள் என்று பெண் ஒருவர் பொது இடத்தில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

டெல்லியில் உள்ள மால் ஒன்றில் இளம்பெண் ஒருவர் குட்டை ஆடை அணிந்து தனது தோழிகளுடன் சென்றுள்ளார். அப்போது அவரை பார்த்த நடுத்த வயது பெண் ஒருவர் பலர் முன்னிலையில் இவ்வாறு குட்டையான ஆடை அணிபவர்களை கற்பழியுங்கள் என்று கூச்சல் போட்டுள்ளார். மேலும் அங்கிருந்த ஆண்களிடம் நீங்கள் இவர்களைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இப்படி உடை அணிந்து வருகிறார்கள் என்றும், இவர்கள் எல்லாம் பலாத்காரம் செய்வதற்குத் தகுதியானவர்கள் என்றும் கூறினார்.

இதைக்கேட்ட இளம்பெண்கள் அதிர்ச்சியடைந்து அந்த பெண்ணிடம் வாக்குவாதம் செய்தனர். தனது சர்ச்சை கருத்துக்கு அந்த பெண் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அந்த மாலுக்கு வந்திருந்த பலரும் இளம்பெண்களுக்கு ஆதரவாக பேசினர். இருப்பினும் கடைசி வரை அந்த பெண் மன்னிப்பு கேட்கவில்லை. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.