அவரு ஒரு தியாகி- பாகிஸ்தான் பிரதமர் கூறிய புதிய கருத்தால் வெடித்தது சர்ச்சை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகிலேயே அதி பயங்கரவாதியாக அறியப்பட்ட ஒசாமா பின்லேடனுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், தியாகி எனப் பட்டம் சூட்டியிருக்கிறார். இந்நிலையில் பிரதமரின் கருத்தால் தற்போது கடும் சர்ச்சை வெடித்து இருக்கிறது. நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவிற்கும் இருந்துவரும் உறவுநிலை குறித்து கருத்துத் தெரிவித்து இருக்கிறார். அப்போது கடந்த 2011 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிறப்புப்படை பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஒசாமா பின்லேடனை கொன்றது. அன்றிலிருந்து இன்றுவரை இருநாடுகளுக்கும் உறவு நிலை சுமூகமாக இல்லை என்னும் பொருள்பட கருத்துத் தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து பேசியபோது, “பாகிஸ்தானின் அபோட்டாபாத்திற்கு வந்த அமெரிக்கர்கள், தியாகி ஒசாமா பின் லாடனைக் கொன்றனர். இதனால்தான் இருநாட்டு உறவிலும் விரிசல் விழுந்தது” எனப் பேசியிருக்கிறார். இவரது கருத்துக்கு அந்நாட்டின் எதிர்க்கட்சியினர் மற்றும் செயல்பாட்டளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பேசிய அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப், “இம்ரான் கான் வரலாற்றைத் திரித்துப் பேசியுள்ளார்” என காட்டத்துடன் பேசியிருக்கிறார்.
மேலும் அந்நாட்டைச் சேர்ந்த பிரபல சமூகச் செயற்பாட்டாளரான மீனா கபீனா, “சமீப காலமாக உயர்ந்து வரும் தீவிரவாதத்தினால்தான் உலகின் பல முனைகளிலும் முஸ்லீம்கள் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். நமது பிரதமர் ஒசாமா பின் லாடனை தியாகி” எனக் கூறியிருக்கிறார். இது வரவேற்கத் தக்கதல்ல எனவும் கருத்து தெரிவித்து இருக்கிறார். உலகம் முழுவதும் பல பயங்கரவாதத் திட்டத்தில் தொடர்புடைய ஒசாமா பின்லேடனை அமெரிக்காவின் சிறப்பு படை 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேடி கடைசியில் பாகிஸ்தானில் வைத்து சுட்டது. அதுவரை பாகிஸ்தானில் ஒசாமா இருந்தார் என்று தனக்கு தெரியவே தெரியாது என பாகிஸ்தானின் உளவுத் துறை சாதித்தது.
ஆனால் கடந்த 2015 ஆம் ஆண்டு பிரபல பத்திரிக்கையான அல்சஜீராவிற்கு பேட்டியளித்த உளவுத்துறை அதிகாரி அசா துரானி சர்ச்சைக்குரிய வகையில் ஒரு குண்டை தூக்கிப் போட்டார். ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் இருந்த விவகாரம் அந்நாட்டின் உளவுத்துறைக்கு ஏற்கனவே தெரியும். ஆனால் சர்வதேச அமைப்புகளிடம் அந்நாடு இதுகுறித்த தகவலைக் கூறாமல் அவரை வைத்து பேரம் பேசலாம் என நினைத்துக் கொண்டு இருந்தது என விளக்கம் அளித்து இருந்தார். 10 ஆண்டுகளாக தீவிர தேடுதல் வேட்டையைத் தொடர்ந்த அமெரிக்க சிறப்பு படை கடைசியில் கடந்த 2011, மே 5 ஆம் தேதி ஒசாமா பின்லேடனை சுட்டு வீழ்த்தியது. சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் பாகிஸ்தானின் ராணுவ அகாடமியும் இருந்ததால் சர்வதேச அளவில் பாகிஸ்தான்மீது மிகப்பெரிய விமர்சனம் வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர், ஒசாமா பின்லேடனை தியாகி என புகழராம் செய்திருக்கிறார். அதுவும் அந்நாட்டின் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் என்பதுதான் மேலும் சர்ச்சையை வளர்க்கிறது. இதுபோல சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்துகளை கூறுவது முதல் முறை அல்லவென்றும் அடிப்படை வாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அடிக்கடி இப்படி கருத்துக் கூறிவருகிறார் என்றும் இம்ரான்கான் மீது விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. அந்நாட்டின் எதிர்க்கட்சியினர் இவரை “தாலிபான் கான்” என்றே விமர்சிக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments