சர்ச்சையை கிளப்பிய உதயநிதி பேச்சு ...! முற்றுப்புள்ளி வைத்த சுஷ்மா மகள்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
அண்மையில் பிரச்சாரத்தின் போது திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடியால் தான் சுஷ்மா ஸ்வராஜ் இறந்தார் என்று கூறியது மிகவும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.
திருப்பூரில் திமுக சார்பாக களமிறங்கும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், உதயநிதி பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் " அரசியலில் மூத்த தலைவர்களை ஓரம்கட்டிவிட்டு, நான் குறுக்கு வழியில் அரசியலுக்கு வந்ததாக, பிரதமர் தாராபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியுள்ளார்.
ஆனால் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு உள்ளிட்ட மூத்த தலைவர்களை ஓரம்கட்டிவிட்டு, குஜராத்தில் முதல்வராக இருந்து குறுக்குவழியில் வந்தவர் தான் மோடி என கூறினார்.
மேலும் பேசிய அவர் சுஷ்மா ஸ்வராஜ்-ன் இறப்பிற்கு கூட மோடி தான் காரணம் என்று குற்றம் சாட்டினார். இதைத்தொடர்ந்து உதயநிதிக்கு தொடர் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் சுஷ்மா ஸ்வராஜ் அவர்களின் மகள் பன்சுரி ஸ்வராஜ் டுவிட்டரில் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது,"உதயநிதி ஜி, உங்கள் அரசியல் பிரச்சாரத்திற்காக என் அம்மா பெயரை பயன்படுத்தாதீர்கள். நீங்கள் கூறுவது தவறானது. பிரதமர் மோடி அவர்கள் மீது என் தாய் மீது நல்ல கவுரவத்தையும், மரியாதையும் வைத்திருந்தார். எங்களுக்கு கஷ்டமான இருண்டகாலத்திலும், பக்கபலமாக இருந்தது கட்சியும், மோடி அவர்களும் தான். உங்களது பேச்சு எங்களை மிகவும் காயப்படுத்துகிறது" என்று கூறி உதயநிதியையும், ஸ்டாலினையும், மோடியையும் அவர் டேக் செய்திருந்தார்.
தமிழக அளவில் தான் சர்ச்சையை கிளப்பி வந்த உதயநிதியின் பேச்சு, இந்திய அரசியலிலே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என சொல்லலாம். திமுக-வில் ஆ.ராசா, லியோனி உள்ளிட்டவர்கள் பெண்கள் குறித்து இழிவாக பேசி, தற்போது பகிரங்க மன்னிப்பு கேட்டு வருகிறார்கள். திமுக-விற்கு பிரகாசமாக வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில், கட்சியில் இருப்பவர்கள் இந்த மாதிரி சர்ச்சை பேச்சுக்களை பேசி வருவது இக்கட்சிக்கு இறங்குமுகமே என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments