முதல்வர் குறித்து சர்ச்சை பேச்சு....! ராசா உருவபொம்மை செருப்பால் அடித்து ஆர்ப்பாட்டம்..!

  • IndiaGlitz, [Monday,March 29 2021]

முதல்வர் பழனிச்சாமி குறித்து ஆ.ராசா சர்ச்சையாக பேசியதால், எடப்பாடியில் அவரின் உருவபொம்மையை செருப்பால் அடித்து, எரித்து அதிமுக-வினர் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறப்பு குறித்து, திமுக-வின் ஆ. ராசா சர்ச்சையாக பேசியதால், மாநிலம் முழுவதும் இவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. முக்கியமாக சேலம் மாவட்டத்தில் ராசாவின் உருவ பொம்மையை உருவாக்கி, அதை செருப்பால் அடித்து, எரித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள் அதிமுக மற்றும் பாஜக-வினர்.

சேலம், எடப்பாடி ரயில் நிலையம் அருகே, அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் சார்பாக ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான அதிமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதே போல் சேலத்தில், அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதிலும் ராசாவின் உருவபொம்மையை செருப்பு, விளக்குமாற்றால் அடித்தும், எரித்தும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தனர் அதிமுக-வினர்.

More News

கலர்ஃபுல்லாக ஹோலி கொண்டாடிய நதியா: வைரல் புகைப்படம்!

இந்தியா முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஜனாதிபதி பிரதமர் உள்பட பலர் ஹோலி பண்டிகை வாழ்த்துக்களைத் தனது சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர் 

4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு: குடிமகன்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நான்கு நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என ஆயத்தீர்வை ஆணையர் கடிதம்

அவதூறு பேச்சு குறித்து சென்னை திருவொற்றியூரில் இபிஎஸ் கண்ணீர் மல்க பேச்சு!

திமுக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இழிவுபடுத்தும்

நான் துக்கட்டா அரசியல்வாதியா? பெண்களுக்கு மரியாதை இதுதானா: கமல் மீது பொங்கிய வானதி

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் மற்றும் வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் போட்டியிட்டு வரும் நிலையில் வானதி சீனிவாசனுக்காக சமீபத்தில் பிரச்சாரம் செய்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி

சேலையில் வெரைட்டி காட்டும் தேசிய விருது நடிகை… வைரலாகும் அவுட்ஃபிட் புகைப்படம்!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தும் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடித்தற்காக  தேசிய விருது பெற்றார்