சாதிப்பழமொழி சொல்லி சர்ச்சை பேச்சு...! திமுக வீரமணிக்கு  தொடரும் கண்டனங்கள்...!

  • IndiaGlitz, [Wednesday,March 31 2021]

பிரச்சார கூட்டத்தில் வழக்கில் இல்லாத சாதிப்பழமொழியை கூறிய தி.க.தலைவர் கி.வீரமணிக்கு தொடர்ந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

சென்னை சைதை தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியனை ஆதரிக்கும் பொருட்டு, ஈக்காட்டுத்தாகலில் பிரச்சார கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் பிரச்சாரம் செய்த, திராவிட கழக தலைவர் கி.வீரமணி பேசியிருப்பதாவது,

நம் மண்ணில் காளிகளுக்கும், காவிகளுக்கும் இடமில்லை என்று கூறினார். இந்த மண் பெரியார்மண், கலைஞர் மண்,காமராஜர் மண், அண்ணா மண் என்ற வார்த்தைகளை மிக ஆக்ரோஷமாகவும் கூறியுள்ளார்.


மேலும் பேசிய அவர், கொரோனாவை காட்டிலும் ஆபத்தான கிருமி பாஜக தான். கொரோனா கிருமியை தடுக்கும் சோப்பு தான் முக.ஸ்டாலின், திமுக தான் கிருமிநாசினி என்று பரப்புரையில் பேசினார்.

தமிழகத்தில் நீட் தேர்வு குறித்து விமர்சித்த வீரமணி, வழக்கில் இல்லாத சாதிப்பழமொழியை எடுத்துக்காட்டாக கூறியுள்ளார். விலங்கான குதிரையை சாதிகளுடன் இவர் ஒப்பிட்டு பேசியது மக்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனால் பொதுமக்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
 

More News

இன்று முதல் 5 நாட்களுக்கு பொதுமக்கள் வெளியே வரவேண்டாம்: வானிலை மையம் அறிவுறுத்தல்!

இன்று முதல் 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

'தளபதி 65' பூஜை நடந்ததை உறுதி செய்த பூஜா ஹெக்டே: எப்படி தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'தளபதி 65' படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இன்று இந்த படத்தின் பூஜை சென்னையில் உள்ள சன் டிவி

சுயலாபத்திற்காகவே மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்… திருச்சி பிரச்சாரத்தில் முதல்வர் காட்டம்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன

சூர்யாவை வெறுப்பேற்ற எனக்கு தெரிஞ்ச ஒரே வழி இதுதான்: கார்த்தியின் வைரல் புகைப்படம்!

பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் புதல்வர்களும் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுமான சூர்யா மற்றும் கார்த்தி அவ்வப்போது தங்களது பேட்டிகளிலும் சமூக வலைதளங்களிலும்

சீமானுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா? பரபரப்பை கிளப்பும் அரசியல் வீடியோ!

தமிழ் தேசியம், ஈழ மக்களுக்கு ஆதரவு ஆகியவற்றை நோக்கமாக கொண்டு கடந்த 2010 ஆம் ஆண்டு சீமான் உருவாக்கிய கட்சிதான் நாம் தமிழர் கட்சி.