சாதிப்பழமொழி சொல்லி சர்ச்சை பேச்சு...! திமுக வீரமணிக்கு தொடரும் கண்டனங்கள்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரச்சார கூட்டத்தில் வழக்கில் இல்லாத சாதிப்பழமொழியை கூறிய தி.க.தலைவர் கி.வீரமணிக்கு தொடர்ந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
சென்னை சைதை தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியனை ஆதரிக்கும் பொருட்டு, ஈக்காட்டுத்தாகலில் பிரச்சார கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் பிரச்சாரம் செய்த, திராவிட கழக தலைவர் கி.வீரமணி பேசியிருப்பதாவது,
"நம் மண்ணில் காளிகளுக்கும், காவிகளுக்கும் இடமில்லை என்று கூறினார். இந்த மண் பெரியார்மண், கலைஞர் மண்,காமராஜர் மண், அண்ணா மண் என்ற வார்த்தைகளை மிக ஆக்ரோஷமாகவும் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், கொரோனாவை காட்டிலும் ஆபத்தான கிருமி பாஜக தான். கொரோனா கிருமியை தடுக்கும் சோப்பு தான் முக.ஸ்டாலின், திமுக தான் கிருமிநாசினி என்று பரப்புரையில் பேசினார்.
தமிழகத்தில் நீட் தேர்வு குறித்து விமர்சித்த வீரமணி, வழக்கில் இல்லாத சாதிப்பழமொழியை எடுத்துக்காட்டாக கூறியுள்ளார். விலங்கான குதிரையை சாதிகளுடன் இவர் ஒப்பிட்டு பேசியது மக்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனால் பொதுமக்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout