சர்ச்சை பேச்சு...உதயநிதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்...!
- IndiaGlitz, [Wednesday,April 07 2021]
உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது முன்னாள் மத்திய அமைச்சர்களின் இறப்பு குறித்து பேசுவது கடும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
கடந்த 2019-இல் எந்த அளவிற்கு பிரச்சாரங்களை செய்தாரோ உதயநிதி, அதைவிட இந்த சட்டமன்ற தேர்தலுக்கு கடுமையாக உழைத்திருந்தார். அதுபோல எதிர்க்கட்சியினரையும் சரமாரியாக தாக்கி பேசியிருந்தார். முக்கியமாக அதிமுக,பாஜக கட்சிகளின் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பேசியது வைரலானது. இதே போல் பிரதமர் மோடியின் அழுத்தம் காரணமாகவே, மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் உயிரிழந்தனர் என கூறி பிரச்சாரம் செய்திருந்தார். இது மிகவும் சர்ச்சையாகி, சுஷ்மா-வின் மகள் என் அம்மாவின் இறப்பை கூறி ஓட்டுகேட்காதீர்கள் என்று கூறி டுவிட்டரில் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதனால் பாஜக தரப்பில் இருந்து உதயநிதி மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. தனிநபர் விமர்சனம் தேர்தல் விதிகளுக்கு புறம்பானது, இதுபற்றி உதயநிதி இன்று மாலை 5 மணிக்கு தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளிக்கவேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அவர் தகுந்த விளக்கம் அளிக்கவில்லை என்றால், அவரை கேட்காமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.