சர்ச்சை பேச்சு...உதயநிதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்...!

  • IndiaGlitz, [Wednesday,April 07 2021]

உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது முன்னாள் மத்திய அமைச்சர்களின் இறப்பு குறித்து பேசுவது கடும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

கடந்த 2019-இல் எந்த அளவிற்கு பிரச்சாரங்களை செய்தாரோ உதயநிதி, அதைவிட இந்த சட்டமன்ற தேர்தலுக்கு கடுமையாக உழைத்திருந்தார். அதுபோல எதிர்க்கட்சியினரையும் சரமாரியாக தாக்கி பேசியிருந்தார். முக்கியமாக அதிமுக,பாஜக கட்சிகளின் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பேசியது வைரலானது. இதே போல் பிரதமர் மோடியின் அழுத்தம் காரணமாகவே, மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் உயிரிழந்தனர் என கூறி பிரச்சாரம் செய்திருந்தார். இது மிகவும் சர்ச்சையாகி, சுஷ்மா-வின் மகள் என் அம்மாவின் இறப்பை கூறி ஓட்டுகேட்காதீர்கள் என்று கூறி டுவிட்டரில் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதனால் பாஜக தரப்பில் இருந்து உதயநிதி மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. தனிநபர் விமர்சனம் தேர்தல் விதிகளுக்கு புறம்பானது, இதுபற்றி உதயநிதி இன்று மாலை 5 மணிக்கு தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளிக்கவேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அவர் தகுந்த விளக்கம் அளிக்கவில்லை என்றால், அவரை கேட்காமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.


 

More News

ரொம்ப வருத்தமா இருக்கு: அஜித் செல்பி விவகாரம் குறித்து டிடி பதிவு செய்த டுவிட்!

தமிழகத்தில் நேற்று சட்டமன்ற பொதுத்தேர்தல் நடந்த நிலையில் இந்த தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற மனைவி ஷாலினியுடன் வந்த அஜித்தை ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு பார்க்க முயன்றதால்

பிக்பாஸ் ஷிவானியின் 'நத்திங் ஸ்பெஷல்' புகைப்படம்: இணையத்தில் வைரல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற தொலைக்காட்சி நடிகை ஷிவானி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யும் புகைப்படங்கள் வைரலாகும் என்பது தெரிந்ததே

விராத் கோஹ்லியை அலேக்காக தூக்கிய அனுஷ்கா ஷர்மா: வைரல் வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி, பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில்

சட்டசபை தேர்தலில் ஓட்டுபோடாத சினிமா பிரபலங்கள்...!லிஸ்ட் இவ்ளோ பெருசா...?

தமிழகத்தில் நேற்று சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பான முறையில் நடைபெற்று முடிந்தது.

செக் மோசடி வழக்கு: சரத்குமார், ராதிகாவுக்கு சிறைதண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

செக் மோசடி வழக்கில் சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.