'சசிகலா' குறித்த சர்ச்சைக்குரிய வசனம் நீக்கம்: லைகா தகவல்!

  • IndiaGlitz, [Friday,January 10 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இந்த படத்தில் சசிகலா குறித்து சர்ச்சைக்குரிய ஒரு வசனம் இடம் பெற்றிருப்பதாக சமூகவலைத்தளங்களில் பரபரப்பான செய்திகள் வெளியானது

இதனை அடுத்து இந்த வசனத்தை நீக்க வேண்டும் என சசிகலாவின் வழக்கறிஞர் படக்குழுவினர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் வசனத்தை நீக்காவிட்டால் அவர் சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அந்த குறிப்பிட்ட வசனம் நகைச்சுவைக்காகவே இடம் பெற்றிருந்ததாகவும், இந்த வசனம் யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் இருந்தால் அந்த வசனம் நீக்கப்படும் என்றும் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா தெரிவித்துள்ளது

இதனை அடுத்து தர்பார் படத்தில் இருந்து ’பணமிருந்தால் சிறையில் உள்ளவர்கள் கூட ஷாப்பிங் சென்று வரலாம்’ என்ற அந்த சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்பட்டது. இதனால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது

More News

இனி நீங்க Facebook பார்க்க போற விதமே மாற போகுது... டோட்டல் ரீடிசைன்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் புதிய பேஸ்புக் மறுவடிவமைப்பைப் பெறுவார்கள் என்று ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

Samsung ரசிகர்கள் யாரவது இருக்கீங்களா..?! இந்தியாவில் வெளியாகிறது.. Samsung Galaixy Note 10 Lite..!

Galaxy S10 Lite உடன் Samsung Galaxy Note 10 Lite விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீபிகா படுகோன் படத்திற்கு ஒரு தியேட்டரையே புக் செய்த முன்னாள் முதல்வர்!

ஜே.என்.யூ மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்ததற்காக தீபிகா படுகோனேவின் 'சப்பக்' என்ற திரைப்படத்திற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும்

மருமகளின் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மாமியாருக்கு நேர்ந்த கொடுமை!

https://tamil.news18.com/news/national/woman-killed-her-mother-in-law-with-snakebite-for-objecting-to-her-extramarital-affair-san-242381.html

ஐயா.. தமிழ் இயக்குனர்களே, இனிமேல் இப்படி பண்ணாதீங்க.. ட்வீட் போட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி..!

தமிழ் இயக்குனர்களே இனிமேல் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பின்னனியுடைய படங்களை எடுக்காதீர்கள் என தமிழ்நாட்டை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.