கௌதமிக்கு மத்திய அரசின் மதிப்பு மிகுந்த பதவி
- IndiaGlitz, [Saturday,August 12 2017]
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்தித்தும் கடிதம் மூலமூம் அவ்வப்போது தொடர்பு கொண்டு பல கோரிக்கைகளை வலியுறுத்தியவர் நடிகை கெளதமி என்பது தெரிந்ததே. குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணத்தின் காரணத்தை கண்டுபிடிக்க கோரி பிரதமருக்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தியவர்.
இந்த நிலையில் மத்திய அரசின் முக்கிய பதவிகளில் ஒன்றான தணிக்கை வாரியத்தின் உறுப்பினராக கெளதமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்,. கெளதமியுடன் நடிகை வித்யாபாலனும் இந்த பதவியை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவராக இருந்த பிரபல தயாரிப்பாளர் பஹலாஜி நிஹலானி திடீரென நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி அந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்சார் போர்டே வேண்டாம் என்று கமல்ஹாசன் உள்பட பலர் வலியுறுத்தி வரும் நிலையில் புதிய தலைவர் மற்றும் புதிய உறுப்பினர்களால் மாற்றம் நிகழுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.