தொடரும் ஊரடங்கு...! ரயில்கள் சேவை ரத்து...!
- IndiaGlitz, [Saturday,May 22 2021]
கொரோனா பரவல் மற்றும் புயல் காரணமாக ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்கள் சேவையை ரத்து செய்துள்ளது
கொரோனா வைரஸ் ஒருபக்கம் மக்களை கொடூரமாய் தாக்கி வரும் நிலையில், புயல் ஒருபுறம் வாட்டி எடுத்து வருகிறது. கோவிட் தாக்கத்தின் காரணத்தால், பல மாநிலங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் வெளியூர்களுக்கு செல்ல மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு செல்ல, குறிப்பிட்ட சில சிறப்பு ரயில்கள் மற்றும் இயங்கி வருகிறது.
இந்தநிலையில் அரபிக்கடலில் உருவான டவ் தே புயல், குஜராத், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை கடுமையாக சேதப்படுத்தி உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்வே நிர்வாகம், மே 23 முதல் மே 29ஆம் தேதி வரை இயங்கவிருந்த, நாகர்கோயில் - ஹவுரா, திருச்சி - ஹவுரா, சென்ட்ரல் - புவனேஸ்வர் உள்ளிட்ட 22 சிறப்பு ரயில்கள் சேவையை ரத்து செய்துள்ளது. ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் யாஸ் புயல் கரையை கடக்கும் எனவும் செய்திகள் கூறுகிறது.