கொரோனா பரிசோதனையில் தொடரும் குழப்பங்கள்!!! இந்தியாவின் நிலைமை என்ன!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா நோய்த்தொற்று மற்ற பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் போன்று இருப்பதில்லை. இதற்காகச் செய்யப்படும் பரிசோதனை முதற்கொண்டு இந்த வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு வரை அனைத்தும் வித்தியாசப்படுகின்றன. மேலும், கொரோனா நோய்த்தொற்று ஒருவருக்கு இருக்கிறதா இல்லையா என்பதை உடனடியாகத் தெரிந்துகொள்ள முடிவதில்லை. ஏனெனில் கொரோனா நோய்த்தொற்றுக்கு செய்யப்படும் சோதனை முறைகள் மிகவும் கடினமாக இருப்பதோடு, சந்தேகப்படும் அனைவருக்கும் பரிசோதனை செய்வதற்கான வசதி வாய்ப்புகள் உலகில் எந்த நாடுகளிடமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் உலகின் அனைத்து நாடுகளும் இதுவரை கொரோனா அறிகுறி கொண்டிப்பவர்களை மட்டுமே கொரோனா பேரிசோதனைக்கு உட்படுத்துகிறது.
சீனாவில் பத்திரிக்கைத் துறையினருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 6 முறை சோதனை நடத்தப்பட்டபோது கொரோனா நோய்த்தொற்று இல்லை எனக் கூறப்பட்டது. ஆனால் 7 ஆவது முறை சோதனை செய்யப்பட்டபோது கொரோனா இருப்பது தெரியவந்தது. தற்போது அமெரிக்க தேசிய மருத்துவக் கழகம் இதேபோல பல பிரச்சனைகளைச் சந்தித்து வருவதாக அதன் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். காரணம் ஒருவருக்கு 5 முறை அல்லது 6 முறை கொரோனா பரிசோதனையில் நோய்த்தொற்று இல்லை என முடிவு வந்தாலும் அடுத்த முறை பரிசோதனை செய்யப்படும்போது கொரோனா நோய்த்தொற்று இருப்பதாக சோதனை முடிவுகள் வருகின்றன. இதற்கு கொரோனா படிப்படியான நோய்ப் பரவலைக் கொண்டிருப்பதும் எடுக்கப்படும் மாதிரிகளின் அளவுகளும் அதேபோல மருத்துவப் பரிசோதனையில் நடக்கும் குழறுபடிகளும் காரணமாகச் சொல்லப்படுகிறது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா பரிசோதனையில் பல்வேறு குழப்பங்கள் நீடிக்கின்றன.
கொரோனாவின் அடிப்படைகள்
ஒருவரின் உடலுக்குள் கொரோனா வைரஸ் கிருமி புகுந்துகொண்டுவிட்டால் குறைந்தது 14 நாட்கள் வரையிலும் அது வாழ்கிறது. கொரோனா வைரஸ் இதுவரை உலகில் இல்லாத அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதால் இது கொடூரமான வைரஸ் எனப் பொதுவாகச் சொல்லப்படுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் Script Insitute நடத்திய ஆய்வில், கொரோனா வைரஸ் உண்மையில் ஒரு ஆற்றல் இழந்த வைரஸ் என்று வெளிப்படுத்தி இருந்தது. எப்படி ஆற்றல் இழந்த வைரஸ் இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்ற சந்தேகம் தற்போது உலகம் முழுக்கவே தொற்றிக் கொண்டிருக்கிறது.
எல்லா வைரஸ்கிருமிகளும் மனிதன் மற்றும் விலங்குகளின் உடலில் இருக்கும் செல்லுக்குள் அழையா விருந்தாளியாக புகுந்து கொண்டு தங்களது புரதங்களை பல்லாயிரக்கணக்காக பிரதியெடுத்து நோய்த்தொற்றை வரவழைக்கிறது. இந்த நோய்த்தொற்றை ஏற்படுத்தும் விதத்தை மருத்துவ உலகம் கண்டுபிடிக்கும் பட்சத்தில் நோயில் இருந்து பிழைத்துக்கொள்ளலாம். கொரோனா வைரஸ்களின் RNA கள் எந்த விகிதத்தில் மனித உடலுக்குள் பிரதியெடுக்கின்றன, எப்படி நோயை உண்டுபண்ணுகின்றன என்ற சூட்சுமத்தை மருத்துவ உலகம் கண்டுபிடித்து விட்டால் இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் பிறந்துவிடும். தற்போது இதற்கான முயற்சிகள் உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுதவிர கொரோனா வைரஸிடம் வேறுபல பிரச்சனைகளும் இருக்கின்றன. இந்த நோய்த்தொற்று ஏற்பட்ட மொத்த மக்கள் தொகையில் 25% பேருக்கு எந்த அறிகுறிகளையும் இந்த கிருமிகள் ஏற்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எந்த அறிகுறிகளையும் கொண்டிருக்காமல் திடீரென சிலரை நோயின் தீவிரத்திற்குத் தள்ளிவிடுகிறது. அடுத்து, 75% பேருக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் ஏற்படுகிறது. இந்த 75% அறிகுறிகள் கொண்டிருப்பவர்களிலும் வெறுமனே 5% பேருக்கு மட்டுமே சுவாசக் கோளாறுகள் இருக்கின்றன. ஆக, கொரோனா அறிகுறி என்பது மிக குறைந்த அளவில் மட்டுமே சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. அறிகுறிகளை கண்டுபிடிப்பதிலும் கொரோனா இருக்கிறதா என்பதை கண்டறிவதிலும் உலகம் முழுவதும் குழப்பங்கள் இருந்து வருகின்றன. ஒருகட்டத்தில் கொரோனா இருப்பவர்களை கண்டுபிடிக்க முடியாமல் சளி, இருமல் போன்ற சாதாரண நோய் இருப்பவர்களையும் சீனா தனிமைப்படுத்தி வைத்திருந்தது என்பதும் கவனிக்கத் தக்கது.
இதில் ஒரே நல்ல விஷயம் கொரோனா நோயாளிகள் அனைவருக்கும் கடுமையான சுவசக்கோளாறுகள் வருவதில்லை. எனவே நோய்த்தொற்று இருக்கும் பெரும்பாலானவர்கள் ஆரம்பக் கட்டத்தில் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் காப்பாற்றப்படுகிறார்கள். ஆனால் நீரழிவு, மூச்சுத்திணறல் போன்ற குறைபாடுகள் இருப்பின் அவர்களின் நிலைமை கேள்விக்குறியாகிறது. முதியவர்களுக்கும் இதே நிலைமைதான். ஒருமுறை கொரோனா நோய்த்தொற்று வந்துவிட்டால் அவர்களை 95% திரும்ப பாதிக்காது எனச் சொல்லப்படுகிறது. இதுகுறித்த Anti-body ஆய்வுகளில் தற்போது அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் தீவிரம் காட்டிவருகின்றன.
கொரோனா பரிசோதனைகள்
கொரோனாவிற்கு பெரும்பாலும் ரத்தப் பரிசோதனைகள் பலனளிப்பதில்லை. கொரோனா பரிசோதனைகள் இரு முறைகளில் நடத்தப்படுகின்றன. அறிகுறி இருப்பவகளின் தொண்டை சளி, மூக்கின் சளி போன்றவற்றின் மாதிரிகளை ஒரு பஞ்சு சுற்றப்பட்ட குச்சிகளில் சேகரிக்கப்படுகிறது. Broncho Scope கருவிகளைக் கொண்டு நுரையீரல் தொற்று மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. இப்படி சேகரிக்கப்படும் மாதிரிகளில் கொரோனா மரபணு இருக்கிறதா எனப் பரிசோதனை செய்யப்படுகிறது. பெரும்பாலும் வைரஸ் கிருமிகள் DNA மரபணுக்களைக் கொண்டிருக்காது. வைரஸ்களில் RNA மரபணுக்கள்தான் காணப்படும். சேகரிக்கப்படும் மாதிரிகளிலும் குறைவான RNA கள் தான் இருக்கும். இந்த மாதிரிகளில் உள்ள RNA மரபணுக்களைத் தனியாகப் பிரித்தெடுப்பதும் மிகவும் கடினம். இதற்காக Reverse Transcritption பயன்படுத்தப்படுகிறது. வைரஸ்களில் உள்ள மரபணு முதலில் DNA வாக மாற்றப்படுகிறது. இந்த DNA பல்லாயிரக்கணக்கான பிரதிகளாக படமெடுக்கப்பட்டு பின்னர் அதில் இருந்து RNA மரபணுக்களு அளவிடப்படும். இதற்கு Reverse – time Polymerase chain reaction என்று பெயர். தற்போது இந்தியாவில் ICMR இன் அறிவுறுத்தலின்படி இந்த முறையே மேற்கொள்ளப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி மேற்கொள்ளப்படும் சோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்யவே குறைந்தத 5-6 மணிநேரம் செலவாகிறது. இந்தப் பரிசோதனையை மேற்கொள்வதற்கு பல்வேறு வேதிப்பொருட்கள் தேவைப்படுகின்றன. இந்தியா பெரும்பாலான மருத்துவ வேதிப்பொருட்களை (75%) சீனாவிடம் இருந்துதான் இறக்குமதி செய்கிறது. எனவே தற்போது இந்த வேதிப்பொருட்களுக்கான தட்டுப்பாடுகளும் அதிகம். அதோடு வெளியேற்றப்படும் பரிசோதனை கழிவுகளில் இருந்து அதைக் கையாண்ட மருத்துவப் பணியாளருக்கும் கொரோனா நோய்த்தொற்று வருவதற்கான அபாயம் இருக்கிறது. எனவே மிகவும் பாதுகாப்பான ஆய்வுக்கூடங்கள் தேவைப்படும். இதுவரை இந்தியாவில் சில 100 கணக்கான ஆய்வுக்கூடங்களுக்கு மட்டுமே ICMR அனுமதி அளித்திருக்கிறது. சில தனியார் மருத்துவமனைகளும் இந்த பரிசோதனையை செய்துவருகின்றன. ஆனால் இந்திய மக்கள் தொகை கணக்கீட்டை பொறுத்த வரையில் இது சொற்ப அளவு எனவும் குறிப்பிடத்தக்கது.
அடுத்தக்கட்ட பரிசோதனை, கொரோனா மரபுப்பொருள் மனிதனின் செல்லுக்குள் எந்த அளவிற்கு ஊடுவுகிறது எனக் கண்காணிக்கப்படும். இதை Deliver stage எனக் குறிப்பிடுகின்றனர். Polymerase Chain reaction சுருக்கமாக PCR எனவும் சொல்லப்படுகிறது. இந்த முறைகளைக் கண்டுபிடிக்கும்போது தான் ஒருவருக்கு நோய்த்தொற்று எந்தளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது எனக் கண்டறியமுடியும்.
அடுத்ததாக, கொரோனா வைரஸ்க்கு எதிராக மனிதனின் நோய் எதிர்ப்பு மண்டலம் எப்படி செயல்படுகிறது எனவும் கண்டறியப்படும். மனித நோய்எதிர்ப்பு மண்டலம் நோயை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராக உடனே ஆண்டிபாயாடிக்கை சுரக்கிறது. தற்போது இதிலும் ஒரு பிரச்சனை, அதிகப்படியான ஆண்டிபாயாடிக் சுரக்கும்போது சைட்டோகைன் போன்ற விளைவுகள் ஏற்படுவதாகத் மருத்துவ உலகம் கூறிவருகிறது.
கொரோனாவை கண்டுபிடிக்க மருத்துவ உலகம் தற்போது குறுக்கு வழியில் இன்னொரு பரிசோதனை முறையையும் செய்துவருகிறது. அதாவது கொரோனா அறிகுறி இருப்பவர்களது உடலில் கொரோனா நோய்க்கு எதிராக அவர்களது நோய் எதிர்ப்பு மண்டலங்கள் சுரக்கும் ஆண்டிபயாடிக்கின் அளவை தெரிந்து கொள்வது. மாதிரியில் கொரோனா மரபணு இருக்கிறதா எனக் கண்டுபிடிக்க இது எளிமையான வழிமுறையாக இருக்கிறது. இதற்கு Anti-Bodies என்று பெயர். பெரும்பாலும் கொரோனா வைரஸ் உடலில் பரவி நோயை ஏற்படுத்தும் பட்சத்தில் தான் இந்த முறை பயன்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் பரிசோதனை குறைந்தது 30 நிமிடங்களுக்குள் முடிந்துவிடுகிறது. தற்போது இந்தியாவில் இந்த முறை குறித்து பரிசீலித்து வருகின்றனர். அதாவது கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாகக் கண்டுபிடிக்க இம்முறை பயன்படுகிறது. இப்படிக் கண்டுபிடிக்கப்படும் நோயாளிகள் முறையான கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆக, கொரோனா பரிசோதனை என்பது எளிதான காரியம் அல்ல. பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளும் காலமும், பொருளும், ஆட்பலமும் அதிகம். எனவேதான் கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களுக்கு மட்டும் பேரிசோதனைகள் செய்யப்படுகின்றன. எனவே கொரோனா நோய்த்தொற்றில் இருந்து தப்பிக்க மனிதனின் முன்னால் உள்ள ஒரே வழிமுறை சமூக விலகல் ஒன்றுதான்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments