கடைசி வாரத்திலும் காலை வாரும் போட்டியாளர்கள்.. தனித்திறமை பற்றி கூறுவதில் சர்ச்சை..!

  • IndiaGlitz, [Sunday,January 07 2024]

பிக் பாஸ் நிகழ்ச்சி கடைசி வாரத்தில் அடியெடுத்து வைக்கும் நிலையிலும் கூட போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் காலை வாரும் காட்சி இன்றைய இரண்டாவது புரமோவில் உள்ளது.

இன்றைய இரண்டாவது புரமோவில் கமல்ஹாசன் கடைசி வாரத்தில் அடி எடுத்து வைக்க போகிறீர்கள், தற்போது இருக்கும் போட்டியாளர்களின் தனித்துவமான அம்சம் என்ன என்று கேட்கிறார்.

அதற்கு தினேஷ் ‘விசித்ரா மேம் அவர்களை கூறுகிறேன். அவங்க கிட்ட இருக்குற கெத்து தான் அவங்களோட தனித்திறமை என்று கூறுகிறார். இதனை அடுத்து மாயா, ’விஷ்ணு யாரை எப்படி பயன்படுத்திக் கொண்டு தேவையானதை செய்ய முடியும் என்பது நன்றாக தெரியும், அதுதான் அவருடைய தனித்திறமை என்றும் கூறினார். மேலும் மணியின் தனித்திறமை ரவீனா தான் என்றும் காலை வாரினார்.



 

இதனை அடுத்து விஷ்ணு எழுந்து ’அர்ச்சனாவின் அப்பாவித்தனமான முகம் ஒன்று இருக்கு, அது இங்கே அவருக்கு நன்றாக ஹெல்ப் பண்ணி இருக்குது’ என்று கூறினார். இதனை அடுத்து விசித்ரா எழுந்து ‘200% என்டர்டெயின்மென்ட் செய்வது மாயா தான் என்று கூறினார்.

ஒரு சிலர் சக போட்டியாளர்களை பாராட்டினாலும் சிலர் இந்த வாய்ப்பையும் பயன்படுத்தி காலை வாரும் வகையில் பேசியுள்ளது கடைசி வாரத்தில் கூட சண்டை போடுவதில் குறிக்கோளாக உள்ளனர் என்பது தெரிய வருகிறது.