யார் வெளியே போவார்கள் என சரியாக கணித்த தினேஷ்.. விஷ்ணு சொன்னது என்ன தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இன்று ஒரு போட்டியாளர் எலிமினேஷன் செய்யப்படுவார் என்பது தெரிந்தது. அதிகாரபூர்வமற்ற வாக்கெடுப்பில் மாயா குறைந்த வாக்குகள் பெற்றிருந்தாலும் அவர் வெளியேற வாய்ப்பு இல்லை என்று ஏற்கனவே பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று வெளியேறும் போட்டியாளர் யாராக இருக்கலாம் என கமல்ஹாசன் கேட்க, அதற்கு ஒவ்வொருவராக பதில் சொல்லி வருகின்றனர். மணி வெளியே போக வாய்ப்பு இருக்கிறது என மாயா கூற, மணி அல்லது தினேஷ் ப்ரோ வெளியேற வாய்ப்பு இருப்பதாக அர்ச்சனா கூறுகிறார்.
இதனை அடுத்து விஷ்ணு எழுந்து ’விசித்ரா மேம் நீங்க இருங்கள்’ என்று கூறிவிட்டு ’யாரை சொல்லலாம்’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது கமல்ஹாசன் ’ஓ நீங்கள் தான் எலிமினேஷன் போட்டியாளரை முடிவு செய்வதா’ என கேலியாக கூற உடனே பதறிய விஷ்ணு ’அப்படியெல்லாம் இல்லை சார்’ என்று கூறுகிறார்.
இதனை அடுத்து தினேஷ், விஜய் அல்லது விசித்ரா மேம் ஆகிய இருவரில் ஒருவர் வெளியேறலாம் என்று கூறுகிறார். தினேஷ் கூறியது போலவே விசித்ரா இந்த வாரம் வெளியேறியுள்ளதை அடுத்து அவர்தான் வெளியேறும் போட்டியாளரை சரியாக தினேஷ் கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது இருக்கும் 7 போட்டியாளர்களில் விசித்ரா வெளியேறிவிட்ட நிலையில் மீதமுள்ள ஆறு போட்டியாளர்களில் விஷ்ணு ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டார். அவருடன் இறுதி போட்டியில் பங்கேற்கும் 4 போட்டியாளர்கள் யார் என்பது அடுத்த வாரம் தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments