ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் ஆரம்பித்தது சண்டை.. ஓப்பன் நாமினேஷனில் கடும் வாக்குவாதம்..!

  • IndiaGlitz, [Monday,December 25 2023]

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே போட்டியாளர்கள் தங்களுக்குள் சண்டை சச்சரவு போட்டு வந்த நிலையில் கடந்த வாரம் மட்டும் சண்டை இல்லாமல் இருந்தது. போட்டியாளர்களின் உறவினர்கள் வந்ததால் நெகிழ்ச்சி, அன்பு, பாசம், ஆனந்த கண்ணீர் ஆகியவை ஒரு வாரம் முழுவதும் தென்பட்டது என்பதும் அனேகமாக இந்த சீசனில் கடந்த வாரம்தான் சண்டை இல்லாத வாரம் என்று சொல்லலாம்

ஆனால் இந்த வாரம் மீண்டும் சண்டை தொடங்கிவிட்டது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் நடைபெறும் நிலையில் இந்த வாரம் ஓப்பன் நாமினேஷன் நடைபெறுகிறது.

முதல் கட்டமாக நிக்சனை ரவீனா, தினேஷ், அர்ச்சனா ஆகியோர் நாமினேஷன் செய்கின்றனர். அப்போது நிக்சன், ’க்ளோஸ் நாமினேஷனில் ஒரு சீனும், ஓப்பன் நாமினேஷனில் ஒரு சீனும் நடக்கிறது’ என்று சொல்ல அப்போது மாயா விசில் அடிக்கிறார்

இதனையடுத்து மாயாவை ரவீனா, விஷ்ணு ஆகியோர் நாமினேட் செய்கின்றனர். அப்போது மாயா, ‘ரொம்ப கேவலமா நாமினேஷனுக்கான காரணத்தை சொல்கின்றனர்’ என்று கூற, அப்போது விஷ்ணு எதிர்த்து பேச, ’நான் உன்னை பற்றி பேசவில்லை’ மாயா பதிலளிக்க, ‘நீ ரொம்ப நக்கலா பேசுற’ என்று கூற, அதற்கு மாயா ’போ’ என்று அசால்டாக சொல்கிறார். இதனையடுத்து விஷ்ணு ஆவேசப்படும் காட்சிகளுடன் இன்றைய புரமோ வீடியோ முடிவு பெறுகிறது

மொத்தத்தில் இந்த ஓப்பன் நாமினேஷன் காரணமாக போட்டியாளர்களுக்குள் மீண்டும் சண்டை சச்சரவு தொடங்கி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

தனுஷ் இயக்கும் 3வது படத்தின் டைட்டில்.. பழைய பாடலின் கவிதை வரிகள்..!

தனுஷ் இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று

'அயலான்' டிரைலர் ரிலீஸ் விழா வெளிநாட்டில் நடைபெறுகிறதா? எந்த நாட்டில்?

சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி உள்ள நிலையில் இந்த படம் வரும் பொங்கல் விருந்தாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயலால் 'அன்னபூரணி'க்கு ஏற்பட்ட பாதிப்பு.. ஓடிடி ரிலீசில் தப்பிக்குமா? தேதி அறிவிப்பு..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'அன்னபூரணி' என்ற திரைப்படம் சமீபத்தில் ரிலீசான நிலையில் இந்த படம் ரிலீஸ் ஆன ஒரு சில நாட்களில் சென்னையில் மிக்ஜாம் புயல்  அடித்ததால் சென்னை உட்பட நான்கு

பசங்களுக்கு தாண்டி பசங்கள பத்தி தெரியும்: மணிகண்டனின் 'லவ்வர்' டீசர்..!

 மணிகண்டன் நடிப்பில் உருவான 'குட் நைட்' என்ற திரைப்படம் கடந்த மே மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அதே தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'லவ்வர்'

எக்காரணத்தை கொண்டும் அதை ஸ்டாப் பண்ணவே இல்லை.. யாரை சொல்கிறார் விஜய் வர்மா?

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 84 நாள் ஆகிவிட்ட நிலையில்  இன்னும் 11 பேர் வீட்டில் இருக்கிறார்கள் என்பதும் எனவே அடுத்தடுத்த வாரங்களில் பல திடுக்கிடும் திருப்பங்கள் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது