நீங்க முதல்ல ரூல்ஸ் ஃபாலோ பண்ணுங்க.. பிக்பாஸையே மிரட்டிய தனலட்சுமி
- IndiaGlitz, [Thursday,November 10 2022]
பிக்பாஸ் போட்டியாளர்கள் இதுவரை சக போட்டியாளர்களை மிரட்டுவதை மட்டுமே பார்த்து இருக்கிறோம். ஆனால் முதல் முறையாக பிக் பாஸ் போட்டியாளர் ஒருவர் பிக்பாஸையே மிரட்டி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவு என்பது சர்வ சாதாரணம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் போட்டியாளர்கள் சக போட்டியாளர்களிடம் சண்டை போடும்போது பிக்பாஸ் இடம் தங்கள் நிலைமையை எடுத்துக்கூறி நியாயம் கோருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது . அதேபோல் சனி ஞாயிறு நிகழ்ச்சிகளில் கமல்ஹாசன் இந்த சண்டைகளை பஞ்சாயத்து செய்வார்.
இந்த நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான தனலட்சுமி, பிக்பாஸையே மிரட்டி ரூல்ஸை ஒழுங்காக ஃபாலோ பண்ணங்க என கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது நடைபெற்று வரும் டாஸ்க் குறித்த வாக்குவாதம் அசீம் மற்றும் மணிகண்டன் இடையே நடைபெற்று வருகிறது. அப்போது தனலட்சுமி ’நான் சொன்னதை கேட்டு என் டீமில் உள்ளவர்கள் உள்ளே போகாமல் இரண்டு பொருளை எடுத்து கையில் வைத்திருக்கிறார்கள். நீங்கள் அதை கேமராவில் பார்த்திருப்பீர்கள். நானும் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறேன்.
ஆனால் அவர்கள் ரூல்ஸை ஃபாலோ செய்யாமல் உள்ளே போய் பொருட்களை எடுத்தார்கள். அதெல்லாம் நீங்கள் ஸ்டோரூம் ஷோரூமுக்கு அனுப்பினீர்கள் என்றால் கண்டிப்பாக என் டீமையும் நான் உள்ளே போக சொல்லுவேன். கண்டிப்பாக போக சொல்வேன்.
நீங்க தான் ரூல்ஸ் ஃபாலோ பண்ண வேண்டும் என்று சொன்னீர்கள். அதைக்கேட்டு நான் ஃபாலோ பண்ணினேன். நான் எப்படி ரூல்ஸை ஃபாலோ பண்ணி உதாரணமாக இருக்கின்றேனோ, அதே போல் நீங்களும் எங்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும்’ என்று தனலட்சுமி மிரட்டும் வகையில் கூறுகிறார். தனலட்சுமி பிக்பாஸையே மிரட்டும் அளவுக்கு பேசிய இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Dhanalakshmi threatens Bigg Boss himself on how to run his own house and game. Too much arrogance.#BiggBossTamil6 pic.twitter.com/JXJOqVvr4X
— Bigg Boss Videos & Updates (@BBFollower7) November 10, 2022