கமல் முன் விசித்ராவை டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்: என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான விசித்ராவை கமல்ஹாசன் முன்னிலையில் சக போட்டியாளர்கள் டார்கெட் செய்யும் காட்சிகள் இன்றைய அடுத்த புரோமோ வீடியோவில் உள்ளது.
போட்டியாளர் விசித்ரா ஆரம்பத்தில் பார்வையாளர்கள் மத்தியில் நற்பெயரை பெற்றார். குறிப்பாக வைல்டு கார்டு எண்ட்ரியான அர்ச்சனாவை மாயா கேங் டார்ச்சர் செய்த போது அவருக்கு விசித்ரா ஆதரவு கொடுத்த போது அவருடைய மதிப்பும் மரியாதையும் உயர்ந்தது
ஆனால் கடந்த சில நாட்களாக விசித்ராவின் போக்கு சரியில்லை என்று பார்வையாளர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கயிறு டாஸ்க் குறித்து கமல்ஹாசன் போட்டியாளர்கள் மத்தியில் கேள்வி ஒன்றை வைக்கிறார். ’இந்த டாஸ்க்கில் நியாயமாக இதை செய்து வேண்டும், ஆனால் அதை செய்யலை என்று சொல்பவர்கள் சொல்லலாம்’ என்று கூறினார்.
அப்போது விஜய் வர்மா எழுந்து ’நான் பார்த்த விசித்ரா அம்மாவாக இருந்தால் ஏ நிறுத்துங்கப்பா என்று ஒரு சவுண்ட் கொடுத்து இருப்பார்’ என்று கூறினார். ‘கயிறு கட்டி இருப்பதால் என்னை போக விடாமல், ரூல் பிரேக் ஆகிவிடும் என்று தடுத்தவர் கூல் சுரேஷ்’ என அவர் மீது விசித்ரா குற்றம் காட்டினார்.
அதற்கு கூல் சுரேஷ் விளக்கம் அளித்தது ’இவங்க இல்லாமல் வேறு யாராக இருந்தாலும், கண்டிப்பாக கயிறை அவுத்து விட்டு இருப்பேன், போய் காப்பாற்றுங்கள் என்று சொல்லி இருப்பேன். ஆனால் இவங்க போனா, பிரச்சனை மிகவும் பெருசாகும், இன்னும் வேற மாதிரி போயிரும், அங்கே என்ன நடக்கிறது என்பதை பார்த்து அவர் குளிர் காய்ஞ்சிட்டு வருவார்’ என்று குற்றம் சாட்டினார். போட்டியாளர்களின் கருத்தை கேட்டதும் கமல் என்ன சொல்வார் என்பதை இன்றைய எபிசோடில் பார்போம்,.
மொத்தத்தில் போட்டியாளர்கள் ஒட்டுமொத்தமாக விசித்ராவை டார்கெட் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com