பிஆர் டீம் செட் செய்து உள்ளே வந்திருக்கும் போட்டியாளர்கள்.. இது என்ன ரியாலிட்டி ஷோவா? பிசினஸ்ஸா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஆரம்ப கட்டத்தில் ரசிகர்களே முன்வந்து ஆர்மி பக்கம் ஒன்றை ஆரம்பிப்பார்கள் என்பதும் அதில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருவார்கள் என்பதும் தங்கள் விருப்பத்திற்குரிய போட்டியாளர் வெற்றி பெற வேண்டும் என பதிவு செய்வார்கள் என்பது தெரிந்ததே.
ஆனால் தற்போது போட்டியாளர்களே பிஆர் டீம் செட் செய்து பிக்பாஸ் வீட்டிற்குள் வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நேற்று பிக் பாஸ் யாரெல்லாம் பிஆர் செட் செய்து பிக்பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கிறீர்கள் என்று கேட்டபோது பெரும்பாலானோர் அர்ச்சனாவை குற்றம் சாட்டினார். ஆனால் அதற்கு அர்ச்சனா மறுப்பு தெரிவித்தார்.
ஆனால் உண்மையில் அர்ச்சனா மட்டும் இன்றி மாயா, பூர்ணிமா, விசித்திரா உட்பட பல போட்டியாளர்கள் வெளியில் பிஆர் செட் செய்துவிட்டு தான் போட்டியில் கலந்து கொள்ள வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.
மாயாவின் சார்பில் சமீபத்தில் ஒருவர் மாயாவுக்கு ஆதரவாக போஸ்ட் போட வேண்டும் அதற்கு 100 ரூபாய் பணம் கொடுக்கப்படும் என்று சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்த ஸ்கிரீன் ஷாட் இணையத்தில் வைரல் ஆனது. ஏற்கனவே விசித்ரா தான் ஃபேன் பேஜ் கிரியேட் செய்துதான் வந்திருப்பதாகவும் அவர்களிடம் தன்னை பற்றி போஸ்டர்கள் போட வேண்டும் என்று ஒப்படைத்துவிட்டு வந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
பூர்ணிமாவும் தன்னை ஒரு பிஆர் டீம் அணுகியதாகவும், ஏற்கனவே அர்ச்சனாவுக்கு பணி செய்ய சென்றபோது அவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார், எனவே உங்களுக்கு எங்கள் டீம் பணி செய்ய வேண்டுமா என்று கேட்டதாகவும் மாயாவிடம் கூறிக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் தினேஷ் கூறிய வீடியோ ஒன்று இணையத்தில். அதில் ’மாயாவுக்கு ஏற்கனவே பிஆர் டீம் உள்ளது தனக்கு தெரியும், அவர் இதை ஒரு தொழிலாக அவர் செய்து வருகிறார், அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு பிஆர் டீம் வைத்திருக்கிறார், அவர்கள் ஏகப்பட்ட பேருக்கு பிஆர் டீமாக செயல்பட்டு வருகிறார்கள் அவர்கள் மாயாவுக்கும் கண்டிப்பாக பணி செய்து வருகிறார்கள்’ என்று கூறுகிறார்.
ஏற்கனவே சில நாட்கள் வெளியில் இருந்து இந்த நிகழ்ச்சியை பார்த்ததால் தினேஷுக்கு மாயாவின் பிஆர் டீம் பணி தெரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையெல்லாம் கேட்டு விஷ்ணு ஆச்சரியம் அடைந்துள்ளார்.
மொத்தத்தில் இது ஒரு ரியாலிட்டி ஷோவாக இல்லாமல் ஒரு பிசினஸ் பிசினஸ் ஆக மாறி பார்வையாளர்களை முட்டாளாக்கி வருகிறார்கள் என்று விமர்சனம் எழுந்துள்ளது.
#Dinesh is exposing the #Maya's elite Influencers & big PR Team behind it !!#BiggBossTamil #biggbosstamil7 #Vishnupic.twitter.com/LlmQMqvjZl
— Bad Boss (@StoryTimeWithK) January 4, 2024
#Maya (Bots) Fan's - ₹100rs than unga worth 🤭🤣
— Tharani ᖇᵗк (@iam_Tharani) January 1, 2024
Thug reply 🤙😂#BiggBossTamil7 #VJArchana #BiggBossTamil #Poornima #BiggBoss7Tamil #Vishnu #BiggBossTamilSeason7 pic.twitter.com/wxmH8G7u2Q
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments