நான் தான் சார் கோட்டை விட்டுட்டேன்.. பணப்பெட்டியை எடுக்காதது குறித்து கூறிய போட்டியாளர்..!

  • IndiaGlitz, [Saturday,January 06 2024]

பிக் பாஸ் வீட்டில் இருந்த ரூ.16 லட்சம் மதிப்புடைய பணப்பெட்டியை பூர்ணிமா எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் கமலஹாசன் இன்று மற்ற போட்டியாளர்களிடம் பணப்பெட்டியை எடுக்காமல் மிஸ் செய்து விட்ட போட்டியாளர் யார்? என்று கேள்வி கேட்டார். அதற்கு ஒரு போட்டியாளர் நான் தான் சார் கோட்டை விட்டுவிட்டேன், நான்தான் எடுத்திருக்கணும் என்று கூறியுள்ளார்.

கமலஹாசன் இந்த கேள்வியை கேட்டவுடன் உடனடியாக எழுந்த தினேஷ், ’விசித்ரா மேம் எடுத்திருக்கலாம் என்பது தான் என்னோட கருத்து’ என்று கூறினார். உடனே மணி, ’நானும் விசித்ரா மேம் மிஸ் பண்ணிட்டாங்களோ என்ற எண்ணம் தோன்றியது’ என்று கூறினார்.

இதனை அடுத்து எழுந்த விஷ்ணு, ‘நானும் விசித்ரா மேம் தான் எடுப்பார்கள் என்று நினைத்திருந்தேன், 100 சதவீதம் அவங்க எடுப்பாங்க என்று சொல்லி இருந்தேன்’ என்று கூறுகிறார். இதனையடுத்து எழுந்த விக்ரம் வர்மா, ‘இந்த பெட்டியை மணி எடுத்திருந்தால் அவருக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று மனசார தோன்றுகிறது’ என்று கூறினார்.

இதனை அடுத்து கடைசியாக இருந்த மாயா ’நான் தான் சார் கோட்டை விட்டு விட்டேன், நான் தான் கண்டிப்பா எடுத்திருக்கனும்’ என்று மாயா கூறியதோடு இன்றைய புரமோ முடிவுக்கு வருகிறது. கமல்ஹாசன் கேள்விக்கு விசித்ரா என்ன பதில் சொல்லினார் என்பதை இன்றைய எபிசோடில் பார்த்து தெரிந்து கொள்வோம்.