பிக்பாஸ் அல்டிமேட்டில் எதிர்பாராத திருப்பம்: கண்டெண்ட் கிங் போட்டியாளர் எலிமினேஷன்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கண்டெண்ட் கிங் என்று வர்ணிக்கப்படும் போட்டியாளர் முதல் வாரமே எலிமினேஷன் செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்தி, அபிநய், நிரூப், வனிதா விஜயகுமார், பாலாஜி முருகதாஸ், ஜூலி, ஸ்ருதி, சுஜா வருனே, அனிதா சம்பத், தாமரை, ஷாரிக், தாடி பாலாஜி, சினேகன் மற்றும் அபிராமி ஆகிய போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் இவர்களில் முதல் வாரத்தில் வெளியேறும் போட்டியாளர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல் வாரத்தில் அபினய் எலிமினேஷன் செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும், அவருக்குத்தான் குறைவான வாக்குகள் கிடைத்ததாகவும் கூறப்பட்ட நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் இன்றுவரை சிறப்பாகக் கண்டெண்ட் கொடுத்துக் கொண்டிருக்கும் சுரேஷ் சக்ரவர்த்தி எலிமினேஷன் செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சுரேஷ் இந்த வாரம் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர் வெளியேறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுரேஷ் சக்ரவர்த்தி ஒருவேளை வெளியேற்றப்பட்டு இருந்தால் அது இந்த நிகழ்ச்சியின் விறுவிறுப்புக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என இந்த நிகழ்ச்சியை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com