தமிழகத்தில் +12 தேர்வுகள் ரத்தா? முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் +12 பொதுத்தேர்வுகள் நடத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படலாம் என்ற கருத்துப் பொதுவாக நிலவி வருகிறது.
முன்னதாக கொரோனா பரவலுக்கு இடையில் மாணவர்களின் உடல்நலம், மனநலம் மிகவும் முக்கியம் என்று பேசிய பிரதமர் மோடி சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கல்வி அதிகாரிகள் மற்றும் மாநில பிரதிநிதிகளுடன் நேற்று கலந்து பேசினார். அதையடுத்து இந்தியாவில் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்துச் செய்யப்படுவதாக நேற்று மாலை அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில் தமிழகத்திலும் +12 தேர்வுகள் ரத்தாகுமா என்ற எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது. கொரோனா பரவலின் இரண்டாவது அலையால் தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆல்பாஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் மாணவர்களின் எதிர்காலம் கருதி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தார்.
ஆனால் தற்போது சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ரத்துச் செய்யப்பட்டு இருக்கிறது. இதையடுத்து தமிழகத்தில் +12 பொதுத்தேர்வுகள் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று முதல்வர் தலைமையில் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தின் முடிவில் +12 தேர்வு குறித்த குழப்பம் முடிவுக்கு வரும் என்றும் எதிர்ப்பார்க்கப் படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments