கர்நாடகாவில் திடீர் திருப்பம்: ஆட்சி அமைக்கின்றதா காங்கிரஸ்?

  • IndiaGlitz, [Tuesday,May 15 2018]

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக ஆரம்பத்தில் அதிக இடங்களில் முன்னணியில் இருந்தாலும் தற்போது ஆட்சி அமைக்க தேவையான 112 என்ற எண்ணிக்கையில் வெற்றி இல்லை. அக்கட்சி 84 இடங்களில் வெற்றியும், 20 இடங்களில் முன்னணியிலும் உள்ளது. அதாவது அக்கட்சிக்கு 104 இடங்கள் மட்டுமே உள்ளது. ஆட்சி அமைக்க இன்னும் 8 எம்.எல்.ஏக்கள் தேவை.

ஆனால் அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி 55 இடங்களில் வெற்றி பெற்றும், 23 இடங்களில் முன்னணியிலும் உள்ளது. இக்கட்சிக்கு மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சி ஆதரவு கொடுத்தால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் பெங்களூரு சித்தராமையா வீட்டில் காங்கிரஸ், மஜத கட்சியின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்த பேச்சுவார்த்தையில் முதலமைச்சர் பதவியை குமாரசாமிக்கு விட்டுத்தர காங்கிரஸ் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் ஆட்சி அழைக்க அழைப்பு விடுக்கும்படி குமாரசாமி தரப்பில் இருந்தும் எடியூரப்பா தரப்பில் இருந்தும் ஆளுனருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆளுனர் யாரை ஆட்சி அமைக்க அழைப்பார் என்பது குறித்து இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து விடும்