கொரோனவை விட மோசமான வைரஸ் இந்தியாவை பிடித்துள்ளது..! பாஜகவை சாடிய சஞ்சய் தத்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற முடியாது என பிரதமர் கூறுவது சர்வாதிகார ஆட்சி நடைபெறுகின்றது என்பதைக் காட்டுகிறது. கரோனா வைரஸை விட கொடூரமான வைரஸ் இந்தியப் பொருளாதாரத்தைப் பாதித்துள்ளது என்று அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து இன்று (பிப்.17) புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சஞ்சய் தத், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து, மத்திய பாஜக அரசை இந்துத்துவ அமைப்புகள் இயக்குவதை உறுதி செய்துள்ளது.

கடந்த ஆண்டுகளை விட தற்போது தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான குற்றங்கள் 9% அதிகரித்துள்ளன. தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பழங்குடியினருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் எதிரான ஆட்சியாக பாஜக ஆட்சி உள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிய முதல் யூனியன் பிரதேசம் புதுச்சேரி. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற மாட்டேன் என பிரதமர் கூறியிருப்பது அவர் ஒரு சர்வாதிகாரி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபணம் செய்து வருகிறது.

கரோனாவை விட கொடூரமான வைரஸ் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதித்துள்ளது. இதைப் பற்றி பிரதமருக்குக் கவலை இல்லை என சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

More News

ஏஆர் ரகுமானின் மகளைச் சீண்டிய பிரபல பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின்

தஸ்லிமான நஸ்ரின், முஸ்லிம் பெண்கள் மத அடிப்படையில் ஒடுக்கப் படுவ

இராணுவத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் உயர் பதவிகள் வழங்க வேண்டும்..! உச்சநீதிமன்றம்.

ராணுவத்தில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு, ஆண் அதிகாரிகளுக்கு இணையான கமாண்டர் பொறுப்பு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

டைட்டில் வைக்கும் முன்னரே வியாபாரம் ஆகிவிட்ட தனுஷ் படம்

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய தனுஷின் 40வது திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

14 ஆண்டுகள் சிறை.. விடுதலையாகி, எம்.பி.பி.எஸ் படித்து டாக்டரான இளைஞர்..!

சிறு வயது முதலே அவருக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. அந்த லட்சித்தை சிறைக் கம்பிகளால் தகர்க்க முடியவில்லை. . 

அமலாபால் விவாகரத்துக்கு தனுஷ் காரணமா? அவரே அளித்த விளக்கம்!

நடிகை அமலாபால் மற்றும் இயக்குனர் விஜய் விவாகரத்து கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த நிலையில் இந்த விவாகரத்துக்கு தனுஷ் தான் காரணம் என்று ஏற்கனவே திரையுலகில் ஒரு சிலர் கூறி வருகின்றனர்.