முன்னாள் எம்.பி காலமானார்...! அரசியில் கட்சியினர் இரங்கல்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த முன்னாள் எம்.பி இன்று வயது மூப்பினால் காலமானார்.
காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர் முன்னாள் எம்.பி துளசி அய்யா வாண்டையார், இவருக்கு வயது 93. இவர் 1991 முதல் 1996 வரை தஞ்சை மக்களவை தொகுதியில் எம்.பி யாக இருந்தவர். வயது மூப்பின் காரணமாக சென்னை, சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் இன்று உயிரிழந்தார். இவரது உடல் சொந்த ஊரான பூண்டிக்கு இன்று கொண்டு செல்லப்படுகிறது. துளசி அய்யாவின் இறப்பிறகு அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
அமமுக கட்சித்தலைவர் தினகரன் டுவிட்டரில் துளசி அய்யாவின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது,
"முதுபெரும் காங்கிரஸ் தலைவரும், தீவிர காந்தியப் பற்றாளரும், டெல்டா மாவட்டங்களில் ஆயிரமாயிரம் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்வில் கல்வி ஒளியேற்றி வைத்த கல்வி வள்ளலுமான பெரியவர் கே. துளசி அய்யா வாண்டையார் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்.
பழம்பெருமையும் பாரம்பரிய சிறப்பும் மிக்க குடும்பத்தின் வழித்தோன்றலாக இருந்தாலும் ‘நான் ஒரு விவசாயி’ என்று சொல்வதில் எப்போதும் பெருமிதம்கொண்டவர். ‘ஒரு மனிதனுக்கு எளிமை, நேர்மை, ஆளுமை ஆகிய மூன்றும் இருக்க வேண்டும்’ என்று வலியுறுத்திய துளசி அய்யா.... அதன்படியே வாழ்ந்தும் காட்டியவர். தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றியதோடு அரசியல், விவசாயம், கல்வி, சமூகம், இலக்கியம் என பல துறைகளிலும் முத்திரை பதித்தவர்.
அன்னாரது மறைவால் வாடும் டி. கிருஷ்ணசாமி வாண்டையாருக்கும், குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com