வரி குறைப்பு கேட்டு முறையிடுவது அவர்களது உரிமை: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் எம்பி!

  • IndiaGlitz, [Wednesday,July 14 2021]

தளபதி விஜய் தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரியிலிருந்து விலக்கு வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நேற்று தள்ளுபடி செய்த நீதிமன்றம், விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தது. அதுமட்டுமின்றி சினிமாவில் ஹீரோவாக இருந்தால் மட்டும் போதாது என்றும், நிஜ வாழ்விலும் ஹீரோவாக இருக்க வேண்டும் என்றும், வரி கட்டுவது ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பு என்றும் தெரிவித்து இருந்தது.

நீதிபதியின் இந்த கருத்தும் அபராதமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விஜய்க்கு ஆதரவாகவும், விஜய்க்கு கண்டனம் தெரிவித்தும் பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாஜக பிரபலம் நடிகை காயத்ரி ரகுராம் ஏற்கனவே விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் எம்பி கார்த்திக் சிதம்பரம், விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய குடிமக்கள் யாராக இருந்தாலும் தனக்கு வரி குறைப்பு கேட்டு முறையிடுவது அவர்களது உரிமை என்றும் அவர்களை நடிகன் என்று பார்ப்பது தவறு என்றும் தெரிவித்துள்ளார். கார்த்தி சிதம்பரத்தின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

சிவகார்த்திகேயனின் 'டான்' படப்பிடிப்பு எப்போது?

தமிழகத்தில் கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து சமீபத்தில் திரைப்பட படப்பிடிப்புக்கு

எது பேசினாலும் தப்பாகுது: 'வலிமை' போஸ்டருக்கு வாழ்த்து தெரிவித்த சாந்தனு புலம்பல்!

தல அஜித் நடித்த 'வலிமை' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. மேலும் மோஷன் போஸ்டர் 10

விஜய் உண்மையான ஹீரோ தான்: ஆதரவு தெரிவித்த பாஜக நடிகை

தளபதி விஜய்யின் கார் வரி குறித்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளித்த போது நீதிபதி 'சினிமா ஹீரோக்கள் சினிமாவில் மட்டும் ஹீரோவாக இல்லாமல் நிஜ வாழ்விலும் ஹீரோவாக இருக்க வேண்டும் என்று கருத்து

மீண்டும் நிறைய திரைப்படங்களில் நடிக்கிறேன்: முதலமைச்சரை சந்தித்தபின் வடிவேலு பேட்டி!

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக இருந்த வடிவேலு கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அந்த தேர்தலில் திமுக தோல்வி அடைந்து அதிமுக ஆட்சிக்கு

உலகிலேயே ரொம்ப காஸ்ட்லியான பர்கர்… ஒரு பீஸ் வெறும் ரூ.4 லட்சம்?

கொரோனா நேரத்தில் உணவக உரிமையாளர்கள் பலரும் கடையை இழுத்துப் பூட்டி விட்டு வீட்டில் அமர வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது.