பெண்களை அவமானப்படுத்துவது காங்கிரஸ்- திமுககூட்டணி...! மோடி திருப்பூரில் பிரச்சாரம்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
காங்கிரஸ்-திமுக கூட்டணியின் கலாச்சாரம் பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் அமைந்துள்ளது என பாரத பிரதமர் தாராபுரத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசியுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல்-6 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில், கூட்டணி கட்சியினரை ஆதரித்து தாராபுரத்தில் பிரதமர் மோடி அவர்கள் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது,
"காங்கிரஸ்-திமுக" கட்சி ஆட்சியில் இல்லாமலே இந்த அளவுக்கு பெண்களை இழிவுபடுத்துகிறார்கள். ஆட்சிக்கு வந்தால் பெண்களை இன்னும் அசிங்கப்படுத்துவார்கள். இந்தியாவே தமிழர்களின் கலாச்சாரத்தால் தான் பெருமை கொள்கின்றது. தேசிய ஜனநாயக கூட்டணி வைத்துள்ள வளர்ச்சி திட்டங்களை பட்டியலிட்டே உங்களிடம் ஓட்டுக்கேட்கிறேன் என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், திமுக-காங்கிரஸ் கூட்டணி அவர்களின் குடும்ப வாரிசுகளை மட்டுமே அரசியலுக்கு கொண்டுவரும் நோக்கில் செயல்பட்டுவருகிறது. எதிர்க்கட்சியினர் மற்றும் பெண்களை அவர்கள் இழிவுபடுத்தும் நோக்கில் பேசியது கண்டனத்திற்குரியது. திமுக,காங்கிரஸ் தலைவர்கள் கட்டுப்பாட்டுடன் பேச வேண்டும். திண்டுக்கல் லியோனி பெண்களை உருவகப்படுத்தி இழிவாகவும், திமுக அமைச்சர் ராசா, முதல்வர் பழனிச்சாமி அவர்களின் தாயாரை பற்றியும் கொச்சையாக பேசியுள்ளனர். இவர்கள் ஆட்சியில் இல்லாமலே இந்த நிலை என்றால், ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இங்கு பாதுகாப்பு இருக்காது. பெண்களின் வளர்ச்சிக்கும் இக்கட்சி உறுதுணையாக இருக்காது. மக்கள் உங்கள் பேச்சுக்களை கேட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள்,இனியும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். இவர்கள் ஆட்சியில் தான் மகளிருக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகமாக நடந்துகொண்டு இருக்கிறது.
இதேபோல் திமுகவின் நட்பு கட்சியான திரிணாமுல் காங்கிரஸ், மேற்குவங்கத்தில் ஒரு வயதான பெண்மணியை தாக்கி அவர் உயிரிழந்தார். ஆனால் பாஜக-அதிமுக கூட்டணியில் அப்படி இல்லை. பெண்கள் பெயரில் சில திட்டங்களும், அவர்களை வலிமைப்படுத்தவும் நாங்கள் முயற்சி செய்து வருகிறோம் என்று மோடி அவர்கள் உரையாற்றினார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout