'மெர்சல்' பட நடிகருக்கு திருமண வாழ்த்துக்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தில் விஜய்யை அடுத்து பல நடிகர், நடிகைகள் தங்கள் நடிப்பு திறமையை நிரூபித்திருந்தனர். அந்த வகையில் சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் மனதை விட்டு நீங்காத கேரக்டரில் நடித்தவர் காளிவெங்கட்
தந்தைப்பாசம், மகள் இறந்தவுடன் காட்டும் சோகம், மருத்துவமனையில் ஏமாற்றப்படும்போது வெளிப்படுத்தும் விரக்தி, இறுதியில் பழிவாங்கும் கெத்து என பதினைந்து நிமிட காட்சிகளில் பல பரிணாமங்களில் நடிப்பை வெளிப்படுத்திய காளிவெங்கட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்தது என்பது அனைவரும் அறிந்ததே
இந்த நிலையில் நடிகர் காளிவெங்கட் நேற்று முதல் இல்லற வாழ்க்கையை தொடங்கியுள்ளார். நேற்று காளிவெங்கட்டுக்கும் ஜனனி என்பவருக்கும் சென்னை திருப்போரூர் முருகன் கோவிலில் சிறப்பாக திருமணம் நடந்தது. திருமணத்தில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். காளிவெங்கட்-ஜனனி தம்பதியினர் பல செல்வங்களை பெற்று சிறப்பான தம்பதிகளாக வாழ IndiaGlitz தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments