'மெர்சல்' பட நடிகருக்கு திருமண வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Tuesday,October 31 2017]

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தில் விஜய்யை அடுத்து பல நடிகர், நடிகைகள் தங்கள் நடிப்பு திறமையை நிரூபித்திருந்தனர். அந்த வகையில் சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் மனதை விட்டு நீங்காத கேரக்டரில் நடித்தவர் காளிவெங்கட்

தந்தைப்பாசம், மகள் இறந்தவுடன் காட்டும் சோகம், மருத்துவமனையில் ஏமாற்றப்படும்போது வெளிப்படுத்தும் விரக்தி, இறுதியில் பழிவாங்கும் கெத்து என பதினைந்து நிமிட காட்சிகளில் பல பரிணாமங்களில் நடிப்பை வெளிப்படுத்திய காளிவெங்கட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்தது என்பது அனைவரும் அறிந்ததே

இந்த நிலையில் நடிகர் காளிவெங்கட் நேற்று முதல் இல்லற வாழ்க்கையை தொடங்கியுள்ளார். நேற்று காளிவெங்கட்டுக்கும் ஜனனி என்பவருக்கும் சென்னை திருப்போரூர் முருகன் கோவிலில் சிறப்பாக திருமணம் நடந்தது. திருமணத்தில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். காளிவெங்கட்-ஜனனி தம்பதியினர் பல செல்வங்களை பெற்று சிறப்பான தம்பதிகளாக வாழ IndiaGlitz தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

More News

முதல்முறையாக அஜித், விஜய், சூர்யா படங்கள் மோதுகிறதா?

கோலிவுட் திரையுலகின் மூன்று முன்னணி நடிகர்களான அஜித், விஜய், மற்றும் சூர்யா ஆகியோர்களின் அடுத்த படங்கள் வரும் ஜனவரியில் தொடங்கவுள்ள நிலையில் இந்த மூன்று படங்களும் ஒரே நாளில் வெளியாகும்

'காலா' ரிலீஸ் எப்போது? தனுஷ் நிறுவனம் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் ஜனவரியில் இருந்து ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளிவந்த நிலையில்

நம்பர் ஒன் இடத்தை பிடித்த விராத்கோஹ்லி-மிதாலிராஜ்: இந்தியாவின் பெருமை

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நேற்று நடந்த 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் அடித்த சதம், இந்தியாவின் வெற்றிக்கு மட்டும் உதவவில்லை,

'2.0' ரிலீஸ் தள்ளிப் போகின்றதா? படக்குழுவினர் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சயகுமார், எமிஜாக்சன் நடித்த '2.0' திரைப்படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் இரவுபகலாக நடந்து கொண்டிருக்கின்றது

கமல் மீது வழக்குப்பதிவு: காவல்துறை எடுத்த அதிரடி முடிவு

நிலவேம்பு கசாயம் குறித்து சமீபத்தில் கமல்ஹாசன் பதிவு செய்த டுவீட் ஒன்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து தேவராஜன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.