பிரதமர் மோடி அவர்களுக்கு ஒரு சல்யூட்.. விஷாலின் இந்த பதிவு எதற்கு?
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டதை அடுத்து பிரதமருக்கு ஒரு சல்யூட் என நடிகர் விஷால் தனது சமூக வலைத்தளத்தில் பெருமையுடன் புகழ்ந்துள்ளார்.
500 ஆண்டுகால பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுடன் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி முடிவடைந்து இன்று இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
சற்றுமுன் குழந்தை ராமர் சிலை திறக்கப்பட்டதை அடுத்து பிரதமர் மோடி உட்பட பலரும் குழந்தை ராமரை தரிசனம் செய்தனர். இது குறித்த நேரலை காட்சிகள் சமூக வலைதளங்களிலும் பல முன்னணி ஊடகங்களிலும் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் நடிகர் விஷால் தனது சமூக வலைதளத்தில் ராமர் கோவில் திறக்கப்பட்டது குறித்து பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அன்புக்குரிய மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் செய்த ஒரு மிகச்சிறந்த சாதனைதான் இந்த ராமர் கோவில் திறப்பு விழா. ஜெய் ஸ்ரீ ராம்.
ராமர் கோவில் பல ஆண்டுகளாக பல தலைமுறைகளாக நினைவு கூறப்படும். இந்த அற்புதமான தருணத்திற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் பிரதமர் மோடி அவர்களுக்கு ஒரு சல்யூட் . கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்’ என்று பதிவு செய்துள்ளார்.
Congrats dearest honourable prime minister Modi Saab on another great achievement and another feather in your cap, Jai Shri Ram.
— Vishal (@VishalKOfficial) January 22, 2024
Ram mandir will be remembered for years and generations to come and a tribute to all those who laid their lives and sacrificed themselves for this…
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments