வறுமையின் உச்சம்... நெஞ்சை பிழியும் வைரல் புகைப்படம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா காலத்தில் ஆப்பிரிக்க நாடுகள் மட்டும் அல்ல அரபு நாடான ஏமனிலும் கடுமையான வறுமை நிலவி வருகிறது. ஏற்கனவே ஐ.நாவின் உதவியால் உயிர்பிழைத்து வரும் இந்நாட்டு மக்கள் தற்போது ஐ.நாவுக்கான நன்கொடை குறைந்து வருவதால் மீண்டும் ஆபத்தில் சிக்கி உள்ளனர்.
இந்நிலையில் ஏமன் நாட்டின் பெரும்பாலான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு சான்றாக ஒரு 7 வயது சிறுவனின் புகைப்படம் தற்போது இணையத்தில் கடும் வைரலாகி வருகிறது. 7 வயது சிறுவன் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு வெறும் 7 கிலோ எடையுடன் தற்போது அந்நாட்டின் தலைநகர் சனோவில் சிகிச்சை பெற்று வருகிறான்.
இச்சிறுவனின் புகைப்படத்தை பார்த்தப் பலரும் கண்ணீர் மல்க வருத்தம் தெரிவித்து வருகின்றனர். காரணம் ஊட்டச்சத்து குறைபாட்டால் உடல்மெலிந்து வெறும் 7 கிலோ எடையுடன் இருக்கும் அந்தச் சிறுவனுக்கு பெருமூளை பாதிப்பு ஏற்பட்டு விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இதேபோல அந்நாட்டின் பெரும்பாலான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏமன் நாட்டில் கடந்த 6 ஆண்டுகளாக கடுமையான போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அங்குள்ள 80% மக்கள் ஐ.நாவின் பொருளாதார உதவியை நாடியே இதுவரை உயிர் வாழ்ந்து வருகின்றனர். ஏமனில் ஹுத்தி எனப்படும் உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராகப் போராட்டத்தை கையில் எடுத்து உள்ளனர். இவர்களுக்கு ஈரான் உதவிக்கரம் நீட்டி வருகிறது. அதேபோல ஏமன் நாட்டு இராணுவத்திற்கு சௌதி அரேபியா அரசு உதவிக்கரம் நீட்டி வருகிறது. இருவருக்கும் இடையிலான போர் செயல்பாடுகளால் அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
போர் நடவடிக்கைகளினால் கடந்த 2016 இல் இருந்து இதுவரை 70 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என ஐ.நா கணக்கு வெளியிட்டு உள்ளது. இதனால் கடந்த 2016 இல் இருந்து ஐ.நாவின் உலக உணவுத் திட்டம் 30-40 லட்சம் மக்களின் உணவுக்கு உதவி செய்து வருகிறது. தற்போது கொரோனா பாதிப்பினால் மேலும் பாதிக்கப்பட்டு உள்ள அந்நாட்டு மக்களுக்கு தற்போது 1 கோடியே 20 லட்சம் அளவில் ஐ.நா உதவி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ள 7 வயது சிறுவன் ஃபெயிட் சமீமின் புகைப்படம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. இதனால் ஏமனின் தலையெழுத்து மாறுமா என்ற எதிர்ப்பார்ப்பும் அதிகரித்து உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com