போலி Hand Sanitizer பறிமுதல்!!! ஹரியாணா மாநில அதிகாரிகள் நடவடிக்கை!!!

  • IndiaGlitz, [Saturday,March 14 2020]


இந்தியாவில் கொரோனாவில் பாதிப்பு எண்ணிக்கை 82 ஆக உயர்ந்து இருக்கிறது. மேலும், 2 உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சுகாதாரத்துறை தீவிரத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டு இருக்கின்றன. பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணி செய்யுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறது.

கொரேனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் தன்மைக் கொண்ட தொற்று நோய். எனவே இதன் பரவலில் இருந்து தப்பித்துக் கொள்ள சில பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு உலக சுகாதார நிறுவனம் முதற்கொண்டு அனைத்து நாடுகளும் தங்களது பொது மக்களை கேட்டுக் கொண்டிருக்கிறது.

கொரானாவிற்கு முதல் தடுப்பு நடிவடிக்கையாக கைகளை சுத்தமாக வைக்கமாறு மருத்துவர்கள் முதற்கொண்டு அனைவரும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். கைகள் மூலம் பரவும் கிருமிகள் உடலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் கிருமிநாசினி பொருட்களைப் பயன்படுத்தி அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.

இதனால், உலகம் முழுவதும் Hand wash, Hand Sanitizer போன்ற மருத்துவ கிருமிநாசினி பொருட்களுக்கும் Toilet papers, Wed tissue papers போன்றவற்றிற்கான தட்டுப் பாடுகள் நிலவிவரும் சூழலில் இந்தியாவிலும் இந்தப் பொருட்களுக்கான தேவை அதிகரித்து இருக்கிறது.

இந்தத் தேவையைப் பயன்படுத்திக் கொண்டு பல பதுக்கல் நடவடிக்கைகளும் தற்போது தொடருகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது. தற்போது ஹரியாணா மாநிலம், குருகிராமில் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று போலியான Hand Sanitizer தயாரித்து மக்களிடம் விற்று வந்திருக்கிறது. இதைக் கண்டுபிடித்த அதிகாரிகள் அவர்களிடம் இருந்து சுமார் 5,000 Sanitizer பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

முன்னதாக Hand Sanitizer போன்ற பொருட்களை மக்கள் வீட்டிலே தயார் செய்து பயன்படுத்துவதை தவிர்த்து விட வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுரை கூறினர். காரணம் முறையான அளவில் சேர்க்கப் பட்ட ஆல்கஹால் கலந்த கிருமிநாசினி பொருட்களை வீட்டில் வைத்து தயார் செய்ய முடியாது, அவ்வாறு செய்யப் பட்ட பொருட்கள் நோய் தடுப்பில் இருந்து மக்களை காப்பாற்றுமா? என்பதே சந்தேகம் என்றும் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் போலி கிருமிநாசினி பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டு இருப்பது மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
 

More News

கொரோனா வைரஸால் தாமதமாகும் கார்த்தியின் அடுத்தப் படம்: பரபரப்பு தகவல்

கார்த்தி நடித்த 'கைதி' மற்றும் 'தம்பி' ஆகிய இரண்டு திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் 'சுல்தான்'.

மூன்று வருடங்களுக்கு பின் மீண்டும் களமிறங்கும் லட்சுமிமேனன்: இளம் நடிகருக்கு ஜோடியாகிறார் 

பிரபு சாலமன் இயக்கிய 'கும்கி' என்ற படத்தில் அறிமுகமான நடிகை லட்சுமிமேனன் அதன்பின்னர் சசிகுமாரின் சுந்தரபாண்டியன், விஜய்சேதுபதியின் 'றெக்க' என்ற உட்பட பல திரைப்படங்களில் நடித்தார்

திருமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அனுஷ்கா

பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி, தெலுங்கு திரைப்பட இயக்குனர் பிரகாஷ் கோவலமுடி என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக கடந்த சில நாட்களாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளீயாகி

திடீர் நெஞ்சுவலியால் கீழே விழுந்த டிரைவர்: டிரைவர் இல்லாமல் ஓடிய ஆட்டோவால் பரபரப்பு

சென்னையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவை வேகமாக ஓட்டிக் கொண்டிருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்தார்

திருமணமான சில நிமிடங்களில் கடத்தப்பட்ட இளமதி காவல்நிலையத்தில் ஆஜர்

சாதி மறுப்பு திருமணம் செய்த இளமதி என்ற இளம் பெண் திருமணமான சில நிமிடங்களில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் இளமதி மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது