புனித் ராஜ்குமார் மறைவுக்கு அஜித்-ஷாலினி இரங்கல் செய்தி!
- IndiaGlitz, [Friday,October 29 2021]
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் இன்று மாரடைப்பு காரணமாக காலமானதை அடுத்து அவருக்கு அஜித் மற்றும் அவருடைய மனைவி ஷாலினி அஜித் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் அவர்கள் இன்று காலை திடீரென மாரடைப்பு காரணமாக காலமான செய்தி கன்னட திரையுலகை மட்டுமின்றி இந்திய திரை உலகையே உலுக்கியது என்பது குறிப்பிடதக்கது. புனித் ராஜ்குமார் மறைவு செய்தி கேட்டு பிரதமர் மோடி உள்பட பல அரசியல் பிரபலங்களும், கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தல அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி அஜீத் ஆகிய இருவரும் புனித் ராஜ்குமார் மறைவுக்கு இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளனர். அஜீத்தின் பிஆர்ஓ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: புனித் ராஜ்குமாரின் துரதிர்ஷ்டமான மறைவு கேட்டு வருந்துகிறோம். அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இந்த துயரத்தை போக்க வல்ல வலிமை கிடைக்க வேண்டுகிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Condolence msg from Mr Ajith kumar.
— Suresh Chandra (@SureshChandraa) October 29, 2021
Saddened to hear the unfortunate demise of Shri Puneeth kumar ji, may his family and friends gain strength to over come this grief.
Ajith kumar and Shalini Ajith kumar .