திரையுலகம் இருக்குற வரைக்கும் தம்பி விவேக் வாழ்ந்துகிட்டு தான் இருப்பாரு: நடிகர் பிரபு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகிய விவேக் அவர்கள் இன்று காலை உடல்நலக் கோளாறு காரணமாக காலமான நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதை பார்த்தோம்
ஏற்கனவே ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பலர் இரங்கல் தெரிவித்த நிலையில் சற்றுமுன் நடிகர் பிரபு இரங்கல் செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :
தம்பி விவேக் நம்பள விட்டு போயிட்டாரு. இதை நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு. அவருடைய குடும்பத்தாருக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியல. நல்ல மனிதர், அருமையான கலைஞர், நம்ப திரையுலகம் அவரை இழந்து விட்டோம், தம்பி விவேக் என்னுடன் சேர்ந்து பல படங்கள் நடிச்சிருக்காரு. அவருடைய மறைவு தாங்க முடியாத ஒன்று. திரையுலகம் இருக்கிற வரைக்கும் தம்பி விவேக் வாழ்ந்துட்டு தான் இருப்பாரு. என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்’ என்று தெரிவித்துள்ளார்
Condolence Message from Mr #Prabhu sir.#RIPVivekSir#Vivek pic.twitter.com/1U82JnI5b7
— Diamond Babu (@idiamondbabu) April 17, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments