திரையுலகம் இருக்குற வரைக்கும் தம்பி விவேக் வாழ்ந்துகிட்டு தான் இருப்பாரு: நடிகர் பிரபு

  • IndiaGlitz, [Saturday,April 17 2021]

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகிய விவேக் அவர்கள் இன்று காலை உடல்நலக் கோளாறு காரணமாக காலமான நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதை பார்த்தோம்

ஏற்கனவே ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பலர் இரங்கல் தெரிவித்த நிலையில் சற்றுமுன் நடிகர் பிரபு இரங்கல் செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :

தம்பி விவேக் நம்பள விட்டு போயிட்டாரு. இதை நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு. அவருடைய குடும்பத்தாருக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியல. நல்ல மனிதர், அருமையான கலைஞர், நம்ப திரையுலகம் அவரை இழந்து விட்டோம், தம்பி விவேக் என்னுடன் சேர்ந்து பல படங்கள் நடிச்சிருக்காரு. அவருடைய மறைவு தாங்க முடியாத ஒன்று. திரையுலகம் இருக்கிற வரைக்கும் தம்பி விவேக் வாழ்ந்துட்டு தான் இருப்பாரு. என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்’ என்று தெரிவித்துள்ளார்

More News

விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு: கமல்ஹாசன்

நகைச்சுவை நடிகர் விவேக் இன்று அதிகாலை உடல்நலக் கோளாறு காரணமாக காலமான நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து

விவேக் இடத்தை இனி எவராலும்‌ நிரப்ப முடியாது: தமிழக முதல்வர் இரங்கல் செய்தி!

நடிகர் விவேக் மறைவு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் 'விவேக் இடத்தை இனி எவராலும்‌ நிரப்ப முடியாது' என்று தெரிவித்துள்ளார்

பத்மஸ்ரீ விருது, அப்துல் கலாமின் உண்மைத்தொண்டர்: விவேக் ஒரு காமெடி சகாப்தம்!

தமிழ் திரையுலகின் காமெடி மன்னன் என்று புகழ் பெற்ற கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய காமெடி காட்சிகளோடு சமூக கருத்துக்களையும் பொதுமக்களுக்கு தெரிவிப்பார்.

சிவாஜி படப்பிடிப்பில் மறக்க முடியாத நாட்கள்: விவேக் மறைவு குறித்து ரஜினிகாந்த்!

சின்ன கலைவாணர் விவேக் அவர்கள் இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக காலமானார் செய்தி திரையுலகை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது 

'இறப்பு' குறித்து நடிகர் விவேக் பதிவு செய்த டுவிட்!

பிரபல காமெடி நடிகர் விவேக் அவர்கள் இன்று அதிகாலை காலமான செய்தி திரையுலகினருக்கு மட்டுமன்றி பொதுமக்களுக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. சின்ன கலைவாணர் என்ற பட்டத்துடன்