நடிகையை ஏமாற்றிய வழக்கு....! மணிகண்டனுக்கு கிடைத்த நிபந்தனை ஜாமீன்...!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
நடிகை சாந்தினியை ஏமாற்றிய வழக்கில், மாஜி அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து 2 வாரங்களுக்கு அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் மணிகண்டன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். மேலும் பாஸ்போர்ட்டை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்து விட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
நடிகை சாந்தினி என்பவரை திருமணம் செய்வதாகக் கூறி, 3 முறை கட்டாய கருக்கலைப்பு செய்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை, அடையாறு மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர். மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மணிகண்டன் முன் ஜாமீன் கேட்டு, மனு தாக்கல் செய்திருந்த நிலையில், நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார். இதைத்தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில், முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
அண்மையில் இந்த வழக்கானது நீதிபதி நிர்மல்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வர, போலீஸ் தரப்பில் மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது எனக் கூறப்பட்டது. மனுதாரர் சார்பாக, முத்த வழக்கறிஞர் எஸ்.தினகரன் வாதாட, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார். இந்நிலையில் மணிகண்டனுக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்க, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments